அஜித் சம்மதிக்களனா வசூல் ராஜா எடுத்திருக்க முடியாது – இயக்குனர் சரண்.

0
2073
spsaran
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் தான் ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாய் என்ற இருந்த பெயரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது இயக்குனர் சேரன் தான் இயக்குனர் சேரன், அஜித்தை வைத்து காதல் மன்னன் அமர்க்களம் அட்டகாசம் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கமல் நடித்த வசூல் ராஜா படத்திற்கும் அஜித்திற்கும் இடையே இருக்கும் ஒரு சுவாரசியமான சம்பவத்தை கூறி இருக்கிறார் இயக்குனர் சரண். இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீமேக்தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்தப் படத்தில் கமல் கிரேசி மோகன் பிரகாஷ்ராஜ் சினேகா என்று ஒரு வெற்றிக் கூட்டணியை அமைந்திருந்தார் சரண். சமீபத்தில் இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடினார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசுகையில்இந்த படம் ஆரம்பிக்கும் போது கமல் சார் 45 நாட்கள் தான் சூட்டிங் கால்சீட் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள் அதேபோல இன்னும் 15 நாட்களில் எல்லா வேலையும் ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்னார்கள். மூன்றே மாதத்தில் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இருந்தது.

Vasool Raja MBBS streaming: where to watch online?

ஆனால், அப்போது அட்டகாசம் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடித்து வைத்திருந்தேன். அதன்பின்னர் அஜீத்திடம் சென்று எனக்கு கமல் சார் படம் வாய்ப்பு வந்திருப்பதாக கூறினேன. அதற்கு அஜித், கமல் சார் படம். நீங்க போய் அதை முடிச்சிட்டு வாங்க நானும் அதற்குள் ஜீ படத்தின் ஷூட்டிங்கை முடித்து விடுகிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார். அஜித் ஓகே சொல்லவில்லை என்றால் என்னால் வசூல் ராஜா படத்தை எடுத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement