என் கணவரை தாத்தாவா? அப்பாவா?ன்னு கேட்கிறார்கள் என்று நீலிமா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நீலிமா. அதன் பின்னர் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் .பின் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
அதனை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்து இருந்தார்.
நீலிமா குடும்பம்:
இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருக்கும் போது இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். அதவும் இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமாக மேட்டர்னிட்டி போட்டோ ஷூட் நடத்தியிருந்தார்.
#Neelima About Her Husband Look pic.twitter.com/ugSNLDYxI7
— chettyrajubhai (@chettyrajubhai) April 12, 2023
நீலிமா குழந்தை பெயர்:
அந்த புகைப்படத்தில் நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க நீலிமா எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
நீலிமா அளித்த பேட்டி:
தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் புண்ணியஸ்தலங்களுக்கு சென்று இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். மேலும் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்திருக்கும் 16 ஆகஸ்ட் 1947 என்ற படத்தில் நீலிமா நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் கௌதம் கார்த்திக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நீலிமா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், இயக்குனர் பொன் குமார் தான் என்னை படத்திற்காக அழைத்து இருந்தார்.
கணவர் குறித்து கண்கலங்கிய நீலிமா:
நான் கர்ப்பமாக இருக்கும் போது அம்மன் வேடத்தில் எடுத்த போட்டோசூட் பார்த்து எனக்கு நடிக்க வாய்ப்பு தந்தார். நான் படத்தில் சில நிமிடங்களில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறேன். மேலும், என்னுடைய கணவரின் புகைப்படத்தை பார்த்து பலரும், தாத்தாவா? அப்பாவா? தாத்தா கூட வெளியில் சொல்கிறார்களா? என்றெல்லாம் கிண்டல் செய்திருக்கிறார்கள். என்னுடைய கணவர் சால்ட் அண்ட் பேப்பர் தான். மற்றவர்களுக்காக அவர் டை அடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியது கிடையாது. நானும் அப்படி விரும்பியதும் இல்லை. இயற்கையாக எப்படி இருக்க முடியுமோ அப்படி இருக்கிறார் என்று கண்கலங்கி நீலிமா பேசியிருந்தார். இப்படி அவர் கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.