அவருக்காக நாம் அனைவரும் நிற்க வேண்டும் – உதயநிதிக்கு ஆதரவாக வெற்றிமாறன் கருத்து.

0
757
Vetrimaran
- Advertisement -

உதயநிதியின் சனாதன கருத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் உதயநிதியின் சனாதன கருத்து தான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும். சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும்.

-விளம்பரம்-

அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும்.

- Advertisement -

சனாதனம்:

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் என்ற கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது. திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது.

உதயநிதி கருத்து சர்ச்சை:

இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த சனாதன பேச்சுக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பத்து கோடி ரூபாய் விலை என்று அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் அளித்த பேட்டி:

இப்படி உதயநிதியின் இந்த சனாதன விவகாரம் தான் சோசியல் மீடியாவில் தலைவிரித்து ஆடி கொண்டிருக்கின்றதுஇந்த நிலையில் உதயநிதிக்கு ஆதரவாக இயக்குனர் வெற்றிமாறன் குரல் கொடுத்திருக்கிறார். சென்னை வளசரப்பாக்கம் அன்பு நகர் பகுதியில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருப்பது, பிறக்கின்ற எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை.

உதயநிதி குறித்து சொன்னது:

அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும் ஒடுக்குவதும் வீழ்த்துவதும், அது சுதந்திர மனிதர்களாகிய நம்மளுடைய கடமை. அதைப்பற்றி தான் உதயநிதி பேசியிருக்கிறார். அவருக்காக நாம் அனைவரும் நிற்க வேண்டும். நானும் அவருடன் இருக்கிறேன். நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன். அதேபோல் உதயநிதி தலைக்கு 10 கோடி என்று விலை பேசுவது வன்முறையை தூண்டும் செயலாக இருக்கிறது. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement