நடிகை நயன்தாராவை நடிக்க வைத்தது தான் தவறு என்று இயக்குனர் சேகர் கம்முல்லா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகை ஆகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராகவும், பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவை குறித்து இயக்குனர் சேகர் கம்முல்லா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, 'கஹானி' படத்தின் ரீமேக் தான் 'அனாமிகா'. இந்த படத்தை இயக்க வேண்டாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், பெண்களை மையமாக வைத்து படம் எடுக்க விரும்பினேன். அதனால் தான் அந்த படத்தை எடுத்தேன். அந்த சமயத்தில் நிர்பயா சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சேகர் கம்முல்லா பேட்டி:
அந்த நேரத்தில் எனக்கு எந்த ஒரு நல்ல கதையும் கிடைக்கவில்லை. அதனால் பாலிவுட் படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தேன். அப்போது நயன்தாரா தான் உச்சத்தில் இருந்தார். அவரை வைத்து படம் எடுத்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் அடி வாங்கியிருந்தது. இன்னும் படத்தை உணர்வுபூர்வமாக செய்திருக்கலாம். அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தான் நான் செய்த தவறு என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அனாமிகா படம்:
இப்படி இவர் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் தான் 'கஹானி'. இந்த படத்தினுடைய ரீமேக் தான் 'அனாமிகா'. இதை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி இருந்தார்கள். இரண்டிலுமே நயன்தாரா தான் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கியிருந்தார்.

நயன் திரைப்பயணம்:
இந்தப் படத்தின் மூலம்தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது இயக்குனர் சேகர் அவர்கள் 'குபேரா' என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், சமீபகாலமாக நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
நயன் படங்கள்:
இதை அடுத்து இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் 'மண்ணாங்கட்டி' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்திலும் நயன்தாரா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி படங்கள், தொழில் என பிசியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.






