ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஷங்கர் மற்றும் அர்ஜுன் இருவருக்குமே இந்த படம் ஒரு நல்ல பிரேக்காக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. மேலும், முதல்வன் படத்தில் விஜய் நடிக்க மறுக்க காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
அதாவது ஆரம்பத்தில் சங்கரின் உதவியாளர்கள் முதலில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை சந்தித்து முதல்வன் கதையை சொல்லி உள்ளனர். ஆனால், பல்வேறு பேரத்திற்கு பின்னர் இறுதியில் விஜய்யின் கால் சீட் இல்லாததால் விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடிவயவில்லையாம். ஆனால், ஆரம்பத்தில் இந்த படத்தில் ரஜினி தான் நடிக்க இருந்ததாம்.
ஆனால், அப்போதைய அரசியல் காரணங்களால் ரஜினி அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் தான் விஜய்யை அணுகியுள்ளனர். ஆனால், இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் விஜய்யுடன் நண்பன் படத்திலும் ரஜினியுடன் எந்திரன் 1&2, சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றிவிட்டார். தற்போது இந்தியன் 2வை இயக்கி வரும் சங்கர் அதற்கு பின்னர் முதல்வன் 2 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், முதல்வன் 2 பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம் இந்தியன் 2 போலவே ‘முதல்வன் 2’ எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஷங்கர், அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.