சமீப காலமாக பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல சினிமா வாரிசு நடிகர்கள் களமிறங்கி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வாரிசு நடிகையாக களமிறங்கி இருபவர் தமிழ் சினிமாவின் பிரம்மான்ட இயக்குனராக போற்றப்படும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர்.
இதில் இரண்டு மகள்களுமே மருத்துவம் படித்தவர்கள். டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மற்றொரு மகளான அதிதி, முத்தய்யா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
இதையும் பாருங்க : வேந்தர் டிவி, ஜீ தமிழ் என்று பல சிங்கிங் போட்டியில் கலந்துகொண்டுள்ள சூப்பர் சிங்கர் பைனலிஸ்ட். சூப்பர் சிங்கரிலாவது பட்டம் வெல்வாரா?
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அதிதி தேர்வானது எப்படி என்று தயாரிப்பாளர் 2D ராஜசேகர் கூறியுள்ளார். இந்த படத்தில் நாயகி தேர்வின் போது ஷங்கர் மகள் அதிதியின் பெயர் அடிபட்டுள்ளது. அதிதி தற்போது தான் டாக்டர் படிப்பை முடித்து உள்ளார். இருந்தாலும் அவர் நடிக்க தயாராக இருந்துள்ளார். ஆனால், ஷங்கர், தனது மகளுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
அது என்னவெனில் அதிதி ஷங்கருக்கு ஒரு வருடம் டைம் கொடுத்துள்ள ஷங்கர் அதற்குள் உனக்காக வாய்ப்பை தேடிக்கொள் என்று தன் மகளிடம் கூறி இருக்கிறாராம். ஆனால், ஒருவருடத்திற்கு உள்ளாகவே அதிதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் முதல் படத்திலேயே கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது டபுள் போனஸ் தான்.