ஷங்கர் வீட்டில் நேர்ந்த மரணம் – பாவம் இவருக்கு நேரமே சரியில்ல எவ்ளோ பிரச்சனை.

0
7184
shankar
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படி கொரோனாவால் பல்வேறு பிரபலங்கள் மரணத்து வரும் நிலையில் சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக காலமாகி வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை சிவா காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமாகி உள்ள சம்பவம் திரைதுறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா திரை உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டவர்.

இதையும் பாருங்க : அவ்ளோ கேவலமா சாதாரணமா ஆக்கிடோம் – 90ஸ் கிட்ஸ்களை மீண்டும் கடுப்பில் ஆழ்த்திய 2k kids வீடியோ (எவன்டா இதெல்லாம் எடுக்கறது)

- Advertisement -

இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். ஜென்டில் மேன் படத்தை தொடர்ந்து இவர் இறுதியாக இயக்கிய எந்திரன் 2.0 வரை அணைத்து படங்களும் மாபெரும் வசூல் சாதனை செய்து இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் S.முத்துலக்‌ஷ்மி அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

இயக்குனர் ஷங்கருக்கு சமீப காலமாக பல்வேறு சோதனைகள் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. கடந்த ஆண்டு இந்தியன் 2 செட்டில் கிரேன் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரழந்தனர். அதே போல இந்தியன் 2 படப்படிப்பு விவாகரத்தில் இவருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிரச்சனை, அதே போல இந்த படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று ஷங்கருக்கு தடை விதைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement