கே டிவில பத்ரி படம் பாத்துட்டு இருக்கீங்களா ? அதுல சிறுத்தை சிவாவ நோட் பன்னீங்களா. இதோ அந்த காட்சி.

0
4035
siva
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வீரம், விவேகம், விசுவாசம் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

-விளம்பரம்-

இவர் இயக்கிய பல படங்கள் அஜித்தை வைத்தது தான். இந்நிலையில் இயக்குனர் சிவா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆவதற்கு முன்னரே நடிகராக இருந்துள்ளார். தற்போது அவர் நடிகராக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஆம், சிறுத்தை சிவா, இயக்குனர் ஆகும் முன் பல படங்களில் சிறு சிறு காட்சியில் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய்யின் பத்ரி படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இதே மாதிரி ஒரு ஆம்பள நடிச்சிருந்தா ? பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஷ்மிகாவின் ஆண்கள் ஜட்டி விளம்பரம்.

- Advertisement -

2001 ஆம் ஆண்டு அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியான பத்ரி திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படம் தம்முடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் தழுவல். இந்த படத்தில் விஜய், பூமிகா, பூபேந்திர சிங், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் ஆக்ஷன் கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் நடிகர் விஜய் தனது அண்ணனுக்காக குத்துச்சண்டை வீரராக மாறியிருப்பார்.

This image has an empty alt attribute; its file name is image-6.png
மனதை திருடிவிட்டாய் படத்தில் சிறுத்தை சிவா

மேலும் இந்த படத்தின் எண்ட் கார்ட்டில் நடிகர் விஜய், ஒருவரை தூக்கி கொண்டு ஓடுவர். அவரை இறக்கிவிட்டதும் விஜய்யின்பயிற்சயாளாரான ஷீகான் ஹூசைனி வேறு ஒரு நபரை கைக்காட்டி அவரை தூக்கிக்கொண்டு ஓட செல்லும்போது அவர் கையெடுத்துக் கும்பிடுவார்கள் அந்த காட்சியில் தோன்றியவர் தான் சிறுத்தை சிவா. இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement