இதே மாதிரி ஒரு ஆம்பள நடிச்சிருந்தா ? பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஷ்மிகாவின் ஆண்கள் ஜட்டி விளம்பரம்.

0
24036
rashmika
- Advertisement -

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்துஇருந்தார் . இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : என் வீட்டில் இவர்கள் படமெல்லாம் இருக்கிறது, அதானால் என்ன பட்டியிலினம் இல்லனு சொல்ல போறீங்களா – ருத்ர தாண்டவம் sneak peek வீடியோ.

- Advertisement -

2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது.அதிலும், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வரும் பல நடிகைகளை முந்தி ராஷ்மிகாவிற்கு இப்படி ஒரு கெளரவம் கிடைக்கப்பெற்றது.

என்னதான் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் இவரை வெறுக்கும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் நடித்த ஜட்டி விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விளம்பரத்தில் யோகா பயிற்சியாளராக வரும் ராஷ்மிகா யோகா செய்யும் போது அங்கே பயிற்சி செய்து கொண்டு இருக்கும் ஆண் ஒருவர் அணிந்திருக்கும் ஜட்டி தெரிய அதை ராஷ்மிகா ரசிக்கும்படியான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த வீடியோவை பார்த்த பலரும் இது ஒரு ஆண் பெண்ணின் உள்ளாடையை ரசிப்பது போல நடித்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் அதேபோல காசுக்காக எந்த விளம்பரத்தில் வேண்டுமானாலும் நடிப்பீர்களா என்றும் National Crushக்கு ஜட்டி மேல Crush ராஷ்மிகாவை கழுவி ஊற்றிய வருகிறார்கள்.

Advertisement