அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவு அஜித்தின் படம் தமிழகத்தில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், இந்த படம் 125 கோடி வசூல் செய்துள்ளது குறித்து படத்தின் இயக்குனர் சிவாவிடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரையில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அதற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். அதை மக்கள் கொண்டாடுகிறார்கள். அதோடு நான் அடுத்த கதைக்கு சென்று விடுவேன். இதுதான் என்னை படைப்பாளியாக வழிநடத்தும் என்று நினைக்கிறேன்.
இதையும் படியுங்க : விஸ்வாசத்திற்கு முன் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 அஜித் படங்கள் எவை தெரியுமா.!
ரசிகர்களும் ஒரு படத்தைப் பார்த்து அதை கொண்டாடினால் அதுதான் மிகப்பெரிய ரசிப்புத் தன்மை. இந்தப் படம் இவ்வளவு வசூலித்தது என்ற விபரம் ரசிகர்கள் உட்பட யாருக்கும் தேவையில்லை என்று கருதுகிறேன். அது தயாரிப்பாளர்களுக்கும், பணம் முதலீடு செய்தவர்களுக்கும், வியாபாரத்தைப் பார்ப்பவர்களுக்கும் தான் தேவை.
விஸ்வாசம் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியானது என்றுகூட எனக்குத் தெரியாது.மோதல் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தமாட்டேன். இரண்டு பெரிய படங்கள் வெளியாகிறது அவ்வளவுதான். என்னுடைய உழைப்பை முழுதாக கொடுத்திருக்கிறேனா? என்ற கேள்விதான் எனக்குள் இருக்கும். படைப்பாளியாக எனது வேலையை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.