அஜித்துடன் அடுத்த படம் எப்போ? செய்தியாளர் கேள்விக்கு சிறுத்தை சிவா ரியாக்ஷன் வைரல்.

0
397
- Advertisement -

அஜித்துடன் அடுத்த படம் குறித்த கேள்விக்கு இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்து இருக்கும் ரியாக்ஷன் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சிவா. இவர் ஒளிப்பதிவாளராக தான் சினிமா உலகில் தன்னுடைய கேரியை தொடங்கினார். அதற்கு பிறகு சிறுத்தை படத்தின் மூலம் சிவா இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனை தொடர்ந்து இவர் அஜித் உடன் இணைந்து வீரம் படத்தை இயக்கி வைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது. அது மட்டும் இல்லாமல் இயக்குனர் சிவாவினுடைய ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் அஜித்திற்கு பிடித்துப் போனதால் தன்னுடைய அடுத்த படத்தின் வாய்ப்பையும் அவருக்கே கொடுத்திருந்தார்.

- Advertisement -

அஜித்-சிவா கூட்டணி:

அதன் பணி இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து சிவா அவர்கள் வேதாளம் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை, அதற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் சிவா அஜித்தை வைத்து விவேகம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை சிவா ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்திருந்தார். ஆனால், இந்த படமும் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தது. இதனால் அஜித்- சிவா இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ண மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

விடாமுயற்சி படம்:

ஆனால், மீண்டும் அஜித்- சிவா கூட்டணியில் விசுவாசம் படம் வெளி வந்திருந்தது. இந்த படம் அப்பா- மகள் கதையை பாச கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. அதற்கு பிறகு அஜித் அவர்கள் வினோத்குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களில் வரிசையாக நடித்திருந்தார். தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

ரசிகர்கள் கேள்வி:

முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அதன் பின் அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் படம் ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் நடைபெற்று வருகிறது.

சிவா கொடுத்த ரியாக்ஷன்:

இதனை எடுத்து அஜித் நடிக்க போகும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா தான் இயக்கப் போகிறார் என்று சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிவாவிடம் இது குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு சிவா உடனே கைகூப்பி கும்பிட்டு போட்டு கிளம்பி விட்டார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள், என்னாச்சு? உங்களுக்கும் அஜித்திற்கும் ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement