‘நான் சொல்றபடி நடிச்சா தேசிய விருது’ – 300 பெண்களை சீரழித்த சினிமா இயக்குனர் கைது.

0
717
velsathiran
- Advertisement -

படத்தில் நடித்தால் தேசிய விருது வாங்கித் தருகிறேன் என்று 300 பெண்களை சீரழித்த சினிமா இயக்குனரை கைது செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேல் சத்ரியன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் நோ என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக அறிவித்திருந்தார். அதில் நடிக்கும் நடிகைகள் தேர்வையும் நடத்தி இருந்தார். அப்போது சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பல இளம் பெண்கள் அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் வேல் சத்ரியன் அந்த இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தான் எடுக்கும் படம் தேசிய விருதுக்கான படம் என்றும், அதில் தான் சொல்வது போல் நடித்தால் தான் விருது கிடைக்கும் என்றும் அந்த இளம் பெண்களின் பெற்றோர்களிடம் சத்ரியன் கூறி இருக்கிறார். பின் பெற்றோர்களின் அனுமதியோடு அந்த பெண்களை சத்ரியன் வசியம் செய்திருந்தார். முதலில் சத்ரியன் அந்த பெண்களை கவர்ச்சியாக நிற்க வைத்து போட்டோஸ் நடத்திருக்கிறார்.

- Advertisement -

பெண்களை சீரழித்த இயக்குனர்:

பின்னர் அவர்களின் ஆடைகளை அவிழ்க்க சொல்லி நிர்வாகமாக நிற்க வைத்து வீடியோவும் எடுத்து இருக்கிறார். அந்த சமயத்தில் சில பெண்களிடம் நடிப்பு கற்றுத் தருகிறேன் என்று சொல்லி சத்ரியன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்படி சத்ரியன் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும்போது வீடியோவையும் எடுத்து வைத்திருக்கிறார். பின் அந்த வீடியோக்களை வைத்து சத்ரியன் பெண்களை மிரட்டி பிளாக் மெயில் செய்து சீரழித்திருக்கிறார்.

பாதிக்கபட்ட பெண்கள்:

மேலும், சென்னை, புதுச்சேரி, கோவை, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் என பல்வேறு ஊர்களில் இருந்து வந்த இளம் பெண்கள் அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்து சீரழிந்து ஏமாந்து இருக்கிறார்கள். இப்படி சத்ரியனிடம் வாய்ப்பு கேட்டு சென்ற பெண்களில் ஒருவர் கனகா. இவரால் தான் சத்ரியனின் சுயரூபம் வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. இவர் சத்திரியனிடம் வாய்ப்பு கேட்டு சென்றிருக்கிறார். இவரை முதலில் தன்னுடைய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து இருக்கிறார் சத்ரியன்.

-விளம்பரம்-

கைதான இயக்குனர் சத்ரியன்:

சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை ஆபாச படத்தில் நடிக்க வைக்க சத்ரியன் முயற்சி செய்திருந்தார். இதை புரிந்து கொண்ட கனகா போலீசில் புகார் அளித்திருக்கிறார். கனகா கொடுத்த புகாரின் பேரில் வேலு சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது ஆபாச படம் எடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

சோதனையில் கிடைத்தது:

இதனை அடுத்து சத்ரியன் நடத்தி வந்த அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தார்கள். அதில், ஹார்ட் டிஸ்க்கள், ஆணுறை பாக்கெட்டுகள், லேப்டாப், கேமராக்கள் போன்ற பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பின் போலீசார் பறிமுதல் செய்த ஹார்ட் டிஸ்க்களில் வேல் சத்ரியினால் ஏமாற்றப்பட்ட 300க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச காட்சி அடங்கிய வீடியோக்கள் இடம்பெற்று இருக்கிறது. தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement