எந்த எல்லைக்கும் போகும் நயன்தாரா – உண்மையை உடைத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் , என்ன சொல்லி இருக்காரு பாருங்க?

0
26
- Advertisement -

நயன்தாரா பற்றி இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் விஷ்ணுவரதனும் ஒருவர். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்பு என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம், யட்சன் போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நேசிப்பாயா. இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

- Advertisement -

நேசிப்பாயா படம்:

இந்த படத்தில் அதிதி சங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இப்படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் ஆகும் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் கதாநாயகன் ஆகாஷ் முரளி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் பேட்டி:

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு அதர்வா, நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் விஷ்ணுவர்தனிடம் எந்த காரணத்திற்காக நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்? என்று கேட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நயன் குறித்து சொன்னது:

அதற்கு விஷ்ணுவர்தன், சினிமா, நட்பு என அனைத்திலும் நயன்தாரா காட்டும் அன்பு தான் அதற்கு காரணம். நயன்தாராவுக்கு ஒருவரை பிரித்து விட்டால் அது நண்பர், காதலர், டெக்னீசியன் என யாராக இருந்தாலும் அவருக்காக எந்த எல்லைக்கும் போவார். அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உடையவர். அந்த அர்ப்பணிப்புதான் அவருடைய சினிமா வாழ்க்கையில் இருக்கிறது. அதனால் அவர் எந்த அளவிற்கு பயராக இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அன்பிற்கு அவர் தரும் மதிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

நயன் பற்றிய தகவல்:

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலம் லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் பல கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார்.

Advertisement