பிக் பாஸ் அர்னவை எச்சரித்து அவருடைய முன்னாள் மனைவி போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் பிக் பாஸ் டாஸ்க் கொடுத்த டாஸ்கில் பெண்கள் அணி வென்று ஜாக்லினை காப்பாற்றினார்கள். பின் நேற்று எபிசோடில் வழக்கம் போல் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வைத்து செய்தார். குறிப்பாக, சம்பந்தி பஞ்சாயத்து விறுவிறுப்பாக இருந்தது.
பிக் பாஸ் 8:
கடைசியில் அர்னவ் வெளியேறினார். அர்னவ் வெளிவந்த பிறகு, ஜால்ரா பாய்ஸ் சத்யா, விஷால், தீபக். டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க என்று பேச, உடனே விஜய் சேதுபதி குறிப்பிட்டு, எதற்கு அநாகரீகமாக பேசுகிறீர்கள். உங்களுடைய கருத்தை சொல்லுங்கள், வன்மத்தை கொட்டாதீர்கள். அது ரொம்ப தவறு என்று அறிவுரை சொல்லி இருந்தார். அதோடு அர்னவ் வெளியேறின போது அன்ஷிதா கதறி கதறி அழுந்ததற்கு பலருமே விமர்சித்து இருந்தார்கள்.
View this post on Instagram
திவ்யா ஸ்ரீதர் வீடியோ:
இந்த நிலையில் நடிகர் அர்னவின் முன்னாள் மனைவியும், நடிகையுமான திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது திவ்யா, நீ அடிச்சா வாங்கிட்டு இருக்குற பொண்ணு நான் இல்ல. திரும்பி விழும். என்னடா பண்ணுவ என்று ரீல்ஸ் செய்திருக்கிறார். இதை இவர் அர்னவை எச்சரிக்கும் வகையில் தான் செய்திருக்கிறார் என்று நிட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

அர்னவ்-திவ்யா விவகாரம்:
கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து இருந்தனர். திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். பின் திடீரென அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு தன்னை தாக்கி இருந்ததாகவும் போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.

திவ்யா கொடுத்த புகார்:
பின் திவ்யா மீது அர்னவ் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா அளித்த புகாரின் பெயரில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருந்தார்கள். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் செல்லம்மா சீரியலில் நடித்த அன்ஷிதா தான் என்று கூறப்பட்டது.






