விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 45 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது.
பிக் பாஸ் 9:
இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆறாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், கனி, திவாகர், சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, fj, அரோரா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது. இதில் கனி, சுபிக்ஷா, திவாகர், ரம்யா தான் குறைவான வாக்குகளை பெற்று வந்திந்தார்கள். இதில் எதிர்பார்க்காத வகையில் திவாகர் தான் வெளியேறினார். பெண்கள் விஷயங்களில் அத்துமீறுதல், ஜாதி ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் திவாகர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.
View this post on Instagram
திவாகர் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் பற்றி திவாகர் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீங்கள் வீட்டுக்குள் சென்ற நோக்கம் நிறைவேறியதா?
நான் இங்கு வந்ததன் ஒரே நோக்கம் என்னுடைய நடிப்பு திறமையை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான். அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறி உள்ளது. 42 நாட்கள் தொடர்ச்சியாக கேமரா முன்னால் என் இயல்பையும் திறமையும் காட்ட வேண்டி இருந்தது. இதை ஒரு பெரிய வாய்ப்பாகவும் சவாலாகவும் பார்த்தேன்.
எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தீர்கள்?
நான் 60 நாட்கள் வீட்டுக்குள் இருக்க முடியும் என்று நினைத்தேன். உடலளவிலும் மனதளவிலும் நான் தயாராக இருந்தேன். ஆனால், அதற்கு முன்பாகவே வெளியேறி விட்டேன்.
நீங்கள் வெளியேறியதற்கு காரணம் என்ன?
நான் டாஸ்குகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. இது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பதால் அந்த பங்கு தான் முக்கியம். அதில் நான் பின்தங்கி இருந்தேன். அதில் நான் சரியாக கவனம் செலுத்தாதது தான் வெளியேறியதற்கு முக்கிய காரணம்.

நீங்கள் சண்டை போடும்போது தகுதி, தராதரம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி ஏன் சொல்கிறீர்கள்?
சில நேரங்களில் சிலர் பேசும் விதம் அவமதிப்பதாக இருந்தது. அந்த கோபத்தின் காரணமாக வார்த்தைகள் தானாக வந்தது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
டைட்டில் வின்னர் யார்?
இந்த சீசன் இன்னும் சரியாக சூடு பிடிக்கவில்லை. யாராவது ஒருவர் டைட்டில் வின்னர் என்று இப்போது சொல்லக்கூடிய வகையில் யாருமே தங்களுடைய விளையாட்டை வெளி காட்ட வில்லை. அனைவருமே சராசரி மட்டத்தில் தான் ஆடுகிறார்கள். அடுத்த வாரங்களில் இந்த முடிவுகள் தொடர்ச்சியாக மாறிக் கொண்டுதான் இருக்கும்.
அடுத்த எலிமினேஷன் யார்?
ரம்யா, அரோரா, சுபிக்ஷா ஆகிய மூவரில் ஒருவர் தான். அதேபோல் பார்வதி சில நேரங்களில் கட்டுப்பாடு இழந்து பேசுகிறார். சண்டையை குறைத்தால் நீண்ட நாள் அவரால் விளையாட முடியும். சபரி தன்னுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தவில்லை. கனி முழுக்க சமையலறையில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.






