விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று இருக்கிறது.
சூப்பர் சிங்கர் சீசன் 9:
கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
டிஜே பிளாக் பற்றிய தகவல் :
அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் டிஜே பிளாக். இவரை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடிகளுக்கும், அட்ராசிட்டியும் இவருடைய பங்கு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் டிஜே பிளாக் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் அரசு பள்ளியில் கொடுத்த அம்மா லேப்டாப் தான் இவருடைய வாழ்கையை மாற்றியுள்ளது.
அம்மா லேப்டாப்பில் வீடியோ, கேம்ஸ், சாங்ஸ் போன்றவற்றை நண்பர்களிடம் இருந்து பதிவேற்றும் போது அதனுடன் டிஜே சாஃட்வேரும் வந்துள்ளது. அதனை என்னவேற்று ஆராய்ந்த பிளாக் அது பிடித்து போகவே நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் சுயமாக கற்க ஆரம்பித்திருக்கிறார். தொடக்கத்தில் சிறிய சிறிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பின்னாளில் கடின முயற்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக வந்துள்ளார். இன்று இவர் தமிழ் நாட்டில் பிரபலமான டிஜேக்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
புதிய கார் வாங்கிய டிஜே பிளாக் :
இந்த நிலையில் தான் டிஜே பிளாக் தற்போது சுயமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதோடு கார் வாங்கிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “இது என்னுடைய கனவு, ஓலா காரில் இருந்து ஒரிஜினல் கார் வரை இருந்த உங்களுடைய அன்பிற்கு அனைவருக்கும் தான் நன்றி சொல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தர். டிஜே பிளாக் பகிர்ந்த அந்த வீடியோவில் மாகாபா, சூப்பர் சிங்கர் இயக்குனர், பிரியங்கா, அவருடைய நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.