பிரியங்காவிற்கு ஆதரவாக தனது ஸ்டைலில் பாடல் மூலம் ஆதரவு கொடுத்த DJ பிளாக்- குரேஷி போட்ட கமண்ட்

0
245
- Advertisement -

பிரியங்காவிற்கு ஆதரவாக டிஜே பிளாக் போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

மணிமேகலை கருத்து:

இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வந்தார்கள். ஆனால், தற்போது சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி வருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார். குறிப்பாக, மணிமேகலை குறுக்கே வந்து, நீங்க பேச வேண்டாம் பிரியங்கா. ஏற்கனவே வெளியே எல்லாம் நீங்கதான் தொகுப்பாளினி என்ற மாதிரி பேசுறாங்க அப்படின்னு சொன்ன உடனே பிரியங்கா ஷாக் ஆயிட்டாங்க.

டிஜே பிளாக் வீடியோ:

பின் பிரியங்கா ஹர்ட் ஆயிட்டு வெளிய போயிட்டாங்க. இதை மணிமேகலை- பிரியங்கா இரண்டு பேருமே பேசி தீர்த்து கொள்ள வேண்டிய விஷயம். மணி அவரசப்பட்டு வெளியே போயிட்டாங்க என்று ப்ரியங்காவுக்கு குரல் கொடுத்து பேசி இருந்தார். இந்த நிலையில் பிரியங்காவின் தம்பியாகவும், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் டிஜேவாக பணியாற்றும் டிஜே பிளாக் வீடியோ ஒன்று பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், உண்மை ஒருநாள் வெல்லும் என்று ரஜினியின் பாடலை போட்டு, எனக்கு பெரிதாக வீடியோ போட்டு சொல்ற அளவுக்கு மூளை இல்லை.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதனால் என்னுடைய கருத்தை பாட்டில் சொல்லிவிட்டேன். அதுதான் என்னோட வேலை என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் போட்டிருந்த வீடியோவிற்கு குரேஷி கைதட்டி பாராட்டி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், குரேஷியையும் பிரியங்காவையும் மோசமாக விமர்சித்து திட்டி வருகிறார்கள். அதில் நெட்டிசன் ஒருவன், அக்காவுக்கு ஜால்ராவா ப்ரோ. நிகழ்ச்சி பார்க்கிற எல்லாருக்குமே தெரியும் யார் மேல தப்புன்னு கமெண்ட் போட்டு இருக்கிறார்.

டிஜே பிளாக் பதில்:

அதற்கு டிஜே பிளாக், சிஸ்டர் உடைய நிகழ்ச்சி பார்க்கற உங்களுக்கே தெரியும்னா, நிகழ்ச்சியில வேலை பண்ற எங்களுக்கும் தெரியும்னு யோசிச்சு பாருங்க என்று பதில் கொடுத்தார். உடனே வேறு ஒரு நெட்டிசன், நைஸ் ஜால்ரா பிரதர் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். அதற்கு டிஜே பிளாக், ரொம்ப நன்றி. உண்மை கசக்கும் என்று பதில் கொடுத்திருக்கிறார். இப்படி டிஜே பிளாக்கை நெட்டிசன்கள் வறுத்து எடுக்கும் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

Advertisement