குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி மு க எடுத்துள்ள அதிரடி முடிவு.

0
838
dmk
- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் சட்டத்திற்கு எதிராக வட மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தை கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் போது பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் வன்முறையாக தடியடி செய்து தாக்கினார்கள். அதோடு பல மாணவர்களையும் கைதும் செய்தார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தொடங்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனால் நாடு முழுவதும் பூகம்பம் போல் இந்த போராட்டம் வெடித்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த குடியுரிமை சட்ட திருத்தம் கண்டித்து பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் தீவிர போராட்டம் செய்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் பலர் வீட்டு முன்பு கோலம் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் ஒரு சில நபர்கள் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

இதையும் பாருங்க : நடிகை சிநேகாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை. வித்யாசமாக புகைப்படத்தை பதிவிட்ட பிரசன்னா.

- Advertisement -

எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நிறைவேற்றியது தான் இவ்வளவு போராட்டத்திற்கு காரணம். இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடை பெற்று வருகின்றது. குடியுரிமை திருத்த சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்தி வருகிறது. உரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள் என போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி எட்டாம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த தகவலை சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆவது இந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement