தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சூர்யா- ஜோதிகா, அஜித் – ஷாலினி வரிசையில் பிரபலமான ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரசன்னா – ஸ்நேகா ஜோடி. சினேகா அவர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், அழகான தோற்றத்திற்கும், நடிப்புத் திறனுக்காகவும் தான் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்புகிறார்கள். இறுதியாக அவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். மேலும், சமீபத்தில் வெளியான பட்டாஸ் படத்திலும் இவரது நடிப்பு பாராட்டபட்டது.
நடிகை ஸ்நேகா கடந்த 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார்கள். பின்னர் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும், 2011ம் ஆண்டு பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் பாருங்க : வால்கிங் சென்ற போது ஏற்பட்ட விபத்து. மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள சுசீந்திரன். ஷாக்கிங் புகைப்படம் இதோ.
இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது இரண்டாவது முறை சினேகா அவர்கள் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் இணையங்களில் பரவியது. வளைகாப்பு நடத்தி சந்தோஷமான தருணத்தை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் சினேகா-பிரசன்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் ரசிகர்கள்
ஸ்நேகா பிரசன்னா தம்பதியனரின் முதல் குழந்தையின் பெயர் விகான். தற்போது சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.