2 இடங்களில் ஓட்டு போட்ட திமுக பெண் கவுன்சிலர் – நீதிமன்றம் வரை சென்ற சுயேச்சை வேட்பாளர்

0
385
- Advertisement -

பல ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அறிவித்து இருந்தது. வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து இருந்தார்கள். இந்த நிலையில் திமுக கவுன்சிலராக இருக்கும் மஞ்சுளாதேவி தேர்தல் அன்று 2 இடங்களில் இரண்டு முறை வாக்களித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

-விளம்பரம்-

திருச்சி மாநகராட்சி 56 வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பர் கருமண்டபம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் உள்ள 647ல் வாக்குசாவடிக்கு தனது வாக்கினை செலுத்த சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் உங்கள் ஓட்டு ஏற்கனவே போட்டாச்சு என்று சொன்னார்கள். உடனே நான் இப்போது வருகிறேன், என்னோட ஓட்டை யார் போட்டது? என முத்துலட்சுமி கேட்க வாக்களிக்கும் இடம் முழுவதும் பெரும் பரபரப்பு உண்டானது. உடனே அந்த வார்டில் போட்டியிட்ட மற்ற கட்சியின் வேட்பாளர்கள் வந்து விசாரணையில் இறங்கினர்.

- Advertisement -

இரண்டு ஓட்டுப்போட்ட மஞ்சுளா தேவி:

அப்போது 56வது வார்டு திமுக வேட்பாளரான மஞ்சுளா தேவி வாக்கு சாவடியில் 647ல் ஓட்டு போட்டுவிட்டு 646 வது வாக்குச் சாவடியிலும் வந்து ஓட்டுப்போட்டு இருப்பது தெரிய வந்தது. ஆகவே திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி 2 இடங்களில் இரண்டு முறை ஒட்டு போட்டதாக அவருக்கு எதிராக மற்ற வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் காவல்துறை மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்தார்கள். தேர்தல் முடிவில் 4323 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி 56வது வார்டு கவுன்சிலர் ஆனார்.

கவுன்சிலரான மஞ்சுளாதேவி:

இருந்தபோதிலும் கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலரான மஞ்சுளாதேவி மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதே வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கவிதா என்பவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. பின் திமுக கவுன்சிலர் மஞ்சுளாதேவி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 56வது வார்டு சுயேச்சை வேட்பாளராக நின்ற கவிதா கூறியிருப்பது, திருச்சி மாநகராட்சியின் 56வது வார்டு திமுக கவுன்சிலர் மஞ்சுளாதேவி தேர்தல் அன்று கருமண்டபம் ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடி பாகம் எண் 646 மற்றும் 647 ஆகிய இரு வாக்குச் சாவடியிலும் வாக்களித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மஞ்சுளாதேவி மீது புகார் அளித்த கவிதா:

அந்த இரண்டு சாவடியின் ஆவணங்களிலும் மஞ்சுளாதேவி கையெழுத்திட்டு ஓட்டுப் போட்ட ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் 56வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடியிலும் அவரது ஆதரவாளர்கள் மூலம் கள்ள ஓட்டு போட்டு அவர் வெற்றி பெற்றிருக்கிறார். கள்ள ஓட்டு போடுவது மிகப்பெரிய குற்றம். அப்படி இருக்க கள்ள ஓட்டு போட்ட மஞ்சுளாதேவியை கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து 56வது வார்டு திமுக கவுன்சிலர் மஞ்சுளாதேவி கூறியிருப்பது,

மஞ்சுளா தேவி அளித்த பேட்டி:

தேவையில்லாமல் என் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஓட்டுப்பதிவு அன்னைக்கு நான் எதார்த்தமாக அந்த வாக்குச் சாவடிக்குள் போனேன். அங்கிருந்த அதிகாரிகள் தான் என்னை ஓட்டு போட சொன்னார்கள். அதனால்தான் நான் ஓட்டு போட்டேன். மற்றபடி நான் கள்ள ஓட்டு எதுவும் போடவில்லை. அதிகாரிகள் தானே என்னுடைய ஆவணங்களை வாங்கி சரி பார்த்து ஓட்டு போட விட்டார்கள். அதிகாரிகளோட தப்புக்கு நான் என்னங்க பண்ணுவேன்? என்று கூறியிருந்தார். இதற்கு அரசாங்கம், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.கவுன்சிலரான மஞ்சுளாதேவி

Advertisement