சமீபத்தில் திருமணம் முடித்த நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து மருத்துவர் ஒருவர் போட்ட கமெண்டை சின்மயி பகிர்ந்து இருந்த நிலையில் தற்போது தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார் அந்த மருத்துவர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவனை காதாலித்து வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ரஜினி, அஜித் குடும்பத்தினர், கலா மாஸ்டர், விக்ரம் பிரபு என்று ஒரு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நயன்தாராவின் திருமணம் முடிந்த போது எந்த அளவிற்கு வாழ்த்துக்கள் குவிந்ததோ. அதே அளவு அவரின் கடந்த காலத்தை எல்லாம் குறிப்பிட்டு சில மோசமான கமெண்டுகளும் வந்தது. அந்த வகையில் மருத்துவர் ஒருவர் ‘இதை கமன்ட் செய்ய ஆவலுடன் இருந்தது. இவரின் நடிப்பு திறமையை நான் மதித்தாலும், 40ஐ நெருங்கி பாட்டி வயதை வயதில் இவர் எப்படி குடும்பம் குழந்தையை பெறப்போகிறார் என்று பாவமாக இருக்கிறது.
இதையும் பாருங்க : தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளியின் பெயரை என் மகனுக்கு சூட்டியது பெருமை – சிறு வயதிலேயே சிபி ராஜூக்கு பெருமை சேர்த்த மகன்.
மருத்துவர் போட்ட சர்ச்சை கமன்ட் :
செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF ) இவருக்கு உதவும் என்று நம்புகிறேன் ‘ என்று மோசமாக கமன்ட் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பின்னணி பாடகி சின்மயி, இவரின் இந்த பதிவை பகிர்ந்து அவரின் விவரங்களையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
இதை நான் அனுப்பினேன். ஒரு நடிகை திருமணம் முடிந்து இருக்கிறது. அதை பார்த்து இந்த மருத்துவர் இப்படி ஒரு கேவலமான கமெண்டை போட்டுள்ளார் என்று கூறி இருந்தார். சின்மயின் இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து பலரும் அந்த மருத்துவரை திட்டி தீர்த்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தனது பதிவுக்கு மன்னிப்பு கேட்டும், ஏன் அப்படி பதிவிட்டேன் என்றும் அந்த மருத்துவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட மருத்துவர் :
அதில் ‘முதலில் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்னுடைய சக மருத்துவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதார்த்தமாக பதிவிட்ட பதிவுதான் அதுவே தவிர யாரையும் காயப்படுத்த அல்ல.என்னுடைய கருத்திற்கு முக்கிய காரணம் பொதுவாக 30 வயதைக் கடந்தாலே பெண்ணின் கருமுட்டை பலவீனமடையும். நாங்கள் மருத்துவர்கள் அனைவரும் ஜோதிகாவின் புத்திசாலித்தனமான முடிவை பாராட்டு இருந்தோம்.
ஜோதிகாவை உதாரணம் காட்டிய மருத்துவர் ;
அவர் மிகவும் புத்திசாலித்தனமாக ஐந்து ஆண்டுகள் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டு தங்கள் குழந்தையையும் குடும்பத்தையும் வளர்த்து வந்தார். நானும் நயன்தாராவின் ரசிகன் தான். அதனால் தான் அவர் மீது கொண்ட அக்கறையால் காலம் கடந்த திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்து அவ்வாறு சொன்னேன். இருப்பினும் நான் மீண்டும் ஒருமுறை நயன்தாரா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் ஒரு ஒற்றை கமெண்டை எடுத்துக்கொண்டு யாரையும் மதிப்பிட வேண்டாம் என்று சின்மயி போன்ற நபர்களை கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சொன்னது போல நான் அவ்வளவு வில்லன் கிடையாது’