Chemical அடங்கிய Shampooக்களை தவிர்க்க சொன்ன சித்த மருத்துவர், கேலி செய்த சின்மயி – டாக்டரின் பதிலடி.

0
828
chinmayi
- Advertisement -

டாக்டர் ஷர்மிகாவை விமர்சித்து பாடகி சின்மயி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இதற்கு நெட்டிஷன்கள் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. இதை தொடர்ந்து சின்மயியை சமூக வலைதளத்தில் அடிக்கடி பலர் விமர்சித்து இருந்தார்கள். இதனிடையே பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராகுல் வேறு யாரும் இல்லை, நடிகர் தான். இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார்.

- Advertisement -

சின்மயி குடும்பம்:

இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. மேலும், ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. சமீபத்தில் தான் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் டாக்டர் ஷர்மிகாவை விமர்சித்து சின்மயி பதிவிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

சித்த மருத்துவர் ஷர்மிகா வீடியோ:

அதாவது, சித்த மருத்துவர் ஷர்மிகா அவர்கள் வீடியோ ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், கெமிக்கல் சார்ந்த பொருள்களை அதிகமாக தோல், முடிக்கு பயன்படுத்தக் கூடாது. உதாரணத்திற்கு ஷாம்புகளை எல்லாம் பயன்படுத்தக் கூடாது. ஆர்கானிக் சித்த பொருட்களை பயன்படுத்துங்கள். நாம் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்கள் மாதிரி தான் உடம்பிற்கு வெளியே எடுத்துக் கொள்ள வேண்டும். ஷாம்பூ போன்ற கெமிக்கல் பொருட்கள் பல விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும் என்று கூறி இருந்தார். இதை பார்த்த சின்மயி அவர்கள், குடிக்கும் தண்ணீர் கூட தான் கெமிக்கல்.

-விளம்பரம்-

சின்மயி வீடியோ:

அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியுமா? என்று கிண்டல் கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது குறித்து டாக்டர் ஷர்மிகாவிடம் பேட்டி ஒன்றும் எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருந்தது, பாடகி சின்மயி நான் சொன்னதை தவறாக புரிந்து இருக்கிறார். அவர்கள் சொன்ன மாதிரி தண்ணீர் கெமிக்கல் தான். இருந்தாலும், ஷாம்பூ போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பொருளுக்கும் சாதாரண கெமிக்கலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. எல்லோருக்கும் சொல்வதற்கு கருத்து உண்டு. ஆனால், சொல்லும் விதம் ஒன்று இருக்கிறது. அவர்கள் சொன்னதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

நெட்டிசன்கள் கண்டனம்:

ஆனால், அதை கிண்டல் கேலி செய்யும் விதமாக சொன்னது தான் எனக்கு இரிடேட்டிங்காக இருந்தது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தொகுப்பாளர் அவரிடம் பல பிரபலங்கள் நிறைய கெமிக்கல் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதற்காக அவர் சொல்லி இருப்பாரா? என்று கேட்டதற்கு அவர் எந்த நோக்கில் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கு அத பத்தி எல்லாம் தெரியாது என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து நெட்டிசன்கள் பலருமே, மருத்துவருக்கு நல்லது எது, கெட்டது எது தெரியாதா? மருத்துவர் சொல்வதை விட நடிகர்கள் சொல்வதை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? நீங்கள் இப்படி பேசியது மிகவும் தவறு என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement