தொற்றுக்கு பயந்து டாக்டரை வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர் – வேதனையை பகிர்ந்த பாடலாசிரியர்.

0
3281
- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 775 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம்,காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் கடந்த ஞாயிற்று கிழமை 5 மணிக்கு பிரதமர் மோடி மருத்துவர்களின் சேவையை பாராட்டி கைத்தட்ட சொல்லியிருந்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்துவர்கள் தீவிர சோதனை எடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இரவு பகல் பார்க்காமல், நேரம் பார்க்காமல், தங்களுடைய குடும்பங்களையும் நினைக்காமல், தங்களுடைய உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் ஒவ்வொருவரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஒருவர் தனக்கு நேர்ந்த சில விஷயத்தை பகிர்ந்து உள்ளார். நான் தெலுங்கானாவில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறேன். நகரத்தில் உள்ள பல மருத்துவர்கள் அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து காலி செய்ய வீட்டில் உரிமையாளர்கள் கூறிவிட்டார்கள்.

- Advertisement -

அதற்கு காரணத்தை சொன்னவர்கள் மருத்துவர்கள் அவர்களின் வீட்டில் தங்கினால் அவர்களுக்கும் வைரஸ் தொற்று வந்துவிடும் என்றும் கூறுகிறார்கள். அதிலும் ஒரு உரிமையாளர் நாங்கள் மிகவும் அழகானவர் என்று கூறியிருக்கிறார். எங்களை எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள். தற்போது பெரும்பாலான மருத்துவர்கள் எங்கே செல்வது என்று புரியாமல் பெட்டி படுக்கையுடன் நடு தெருவில் நிற்கிறோம்.

இதற்காகத் தானா நாங்கள் ஒரு நாளில் நாங்கள் 14 மணிநேரம் நாங்கள் இருந்த விடுதி தற்போது மாவட்ட ஆட்சியரின் பெயரில் மருத்துவ அறையாக மாறிவிட்டது. நாங்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் விடுமுறை எடுக்காமல் பல மாதங்களாக வேலை செய்து வருகிறோம். மரியாதை எங்கே கிடைக்கிறது. நாங்கள் எங்களுடைய நலனில் ஆபத்தை மேற்கொண்டிருக்கிறோம். இப்படித்தான் எங்களை நடத்துவார்களா இதுபோல மக்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இது குறித்து பிரபல பாடலாசிரியர் அருண் பாரதி மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் கருத்துக்களை மனவேதனையுடன் டீவ்ட் போட்டுள்ளார்கள். பாடலாசிரியர் அருண் பாரதி எப்போதும் சமூக அக்கறையுடன் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் அவர் கூறி இருப்பது, ஒரே நாளில் மட்டும் 8 பேருக்கு இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கும் செய்தி. நண்பர்களே நீங்கள் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது. அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் கூறி இருப்பது, மருத்துவர்களை வீட்டைவிட்டு காலி செய்ய வேண்டும் என்று சில வீட்டு உரிமையாளர்கள் சொல்லி இருக்கிற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மனிதாபிமானத்தை கொன்று புதைத்துவிட்டு கொரோனாவில் இருந்து தப்பித்து நீங்கள் உயிர் வாழ்ந்தாலும் செத்த பிணத்திற்கு சமம் தான். உயிரை கொடுத்து போராடும் மருத்துவர்களுக்கு இந்த கெதியா??

கொரோனா வைரஸ் இந்த உலகிற்கு எண்ணற்ற பாடங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. சில சம்பவங்களை பார்க்கும் பொழுது மனம் ஆயிரம் சுத்தியல் கொண்டு அடித்தார் போல் வலிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி இந்த உலகில் நடைபெறவே கூடாது. அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியிருந்தார்.

கடந்த வருடம் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மக்கள் மத்தியில் பிரபலமானது. அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற டங்கா டங்கா பாடலை அருண்பாரதி எழுதி இருந்தார். இவர் தற்போது பல படங்களில் பாடல்களை எழுதி வருகிறார்.

Advertisement