காதலுக்கு மரியாதையை படத்தில் வந்த Love and Love Only புத்தகம் உண்மையில் இருக்கிறதா ? இயக்குனர் சொன்ன ஸ்வாரசிய தகவல்.

0
1858
kathaluku
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். விஜயின் படம் என்றாலே திரையரங்கில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். தளபதி விஜய் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பதற்கு மைல் கல்லாக இருந்த படங்களில் ஒன்று தான் காதலுக்கு மரியாதை. இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் விஜய், ஷாலினி, ராதாரவி, சிவகுமார், ராதிகா, சார்லி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தின் காட்சிகள் மட்டுமில்லாமல் பாடல்களும் வேற லெவல். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. இந்நிலையில் இந்த படத்தில் காட்டப்படும் புக் காதல் காட்சி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் ஷாலினி, விஜய் இருவரையும் Love and Love Only என்ற புக் தான் அவர்களை சந்திக்க வைத்தது. அதற்கு பிறகு தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இந்த புக் நிஜவாழ்க்கையில் இருக்கிறதா?? என்று பலரும் சமூக வலைதளங்களில் தேடினார்கள். இதுகுறித்து தயாரிப்பாளர் மனு கண்ணதானம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இது படத்திற்காக உருவாக்கப்பட்ட புத்தகம் தான். இந்தப் புத்தகம் குறித்து தகவல் எங்கேயும் கிடைக்காது. இது படத்திற்காக உருவாக்கப்பட்டது. நானே நிறைய முறை இந்த புத்தகம் குறித்து சமூக வலைத்தளங்களில் தேடிவந்தேன். மேலும், இது குறித்து நான் இயக்குனர் பாசில் இடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவரும் இந்த புத்தகம் காட்சிக்காக எடுக்கப்பட்டது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement