இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி. இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், வி டிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஏசிஎஸ் அருண்குமார், குஷ்புவின் அவ்னி ஆடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் இறைவன் அருளால் பிறக்கும் குழந்தை காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. ஒருவர் எதிர்கொள்வது இன்னொருவரின் நினைவில் இருக்காது. இருவருக்கும் உடல் மட்டும்தான் பொதுவானது என்பதை விட இதயம் மட்டும் தான் பொதுவானது.
இப்படி இருக்கும்போது இருவருக்குமே பொதுவாக ரஜினி என்ற பெயர் வைக்கிறார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவரை பிடிக்கவே பிடிக்காது. இருவருமே வளரும் வரை அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தெரியாமலே இருந்தது. ஆனால், இருவரும் வேலைக்கு சென்ற பின் இவர்கள் குறித்து ஒரு சிலருக்கு தெரிய வருகிறது. அதேபோல் இருவருக்கும் ஏற்படும் காதலுக்கும், இவர்கள் மாறுவது பிரச்சனை இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால், இவர்கள் மாறுவது பிரச்சனையாகிறது.
வில்லனுக்கும் இவர்களின் பிரச்சினை தெரிந்து விடுகிறது. அதற்கு பின் என்ன ஆனது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குனர் எடுத்திருக்கிறார். வழக்கமான அரைத்த மாவை அரைக்காமல் ஒரு புது கோணத்தில் இயக்குனர் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ரஜினி என்ற இரண்டு கதாபாத்திரங்கள் தான் படத்தினுடைய பலமே. படத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.
நடிகர்கள் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, ஆண் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பு காட்சிகளும் கிளாப்ஸுகளை குவிக்கிறது. ரஜினி ஆக சந்தோஷ தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு ரக்கட் சாக்லேட் பாயாகவே வலம் வந்திருக்கிறார் என்று சொல்லலாம். படத்திற்கு இன்னொரு பலம் என்றால் அது டயலாக் தான். நிதானமாகவும் நிறைவாகவும் தெளிவாகவும் இயக்குனர் ஒவ்வொரு வசனங்களையும் கொடுத்திருக்கின்றார். இந்த படத்திற்கு பக்ஸ் பகவதி பெருமாள் தான் வில்லன்.

இவருடைய காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. படத்தில் ரொமான்டிக் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அதேபோல் காமெடியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றது. ஆண் ரஜினிக்கும் பெண் ரஜினி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போன் பயன்படுத்தும் டெக்னிக் எல்லாம் சிறப்பு. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். சாம் சி எஸ் உடைய பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையை இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் டபுள் ஆக்குபன்சி இருக்கிறது.
நிறை:
கதைக்களம் அருமை
நடிகர்களின் தேர்வு நன்றாக இருக்கிறது.
படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நேர்த்தியாக சென்று கொண்டிருக்கின்றது
ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது.

குறை:
ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் டபுள் ஆக்குபன்சி - முற்றிலும் வித்தியாசமான கதை






