ஆர்வ கோளாறில் கண்ணுக்குள் மையை ஊற்றி பார்வையை இழந்த பெண் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பச்சை குத்துதல் என்பது பழங்காலத்தில் இருந்து இப்போது வரை இருக்கும் வழக்கங்களில் ஒன்று. பச்சை குத்துதலை முன்னோர்கள் ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். அதுவும் ஆதிவாசிகள், பழங்குடியின மக்கள் என பலரும் இன்றும் பச்சை குத்துதலை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதை நாகரீகம் என்ற பெயரில் தற்போது டாட்டூவாக ஆக்கி இருக்கிறார்கள். அதிலும் இன்றைய இளைஞர்கள் டாட்டூ குத்துவதை விளையாட்டாக செய்கிறார்கள். தங்களுக்கு பிடித்த பொருள், மனிதர், மலர் பறவை என தங்களுக்கு பிடித்த விஷயங்களை டாட்டூவாக குத்தி வருகிறார்கள். தற்போது டாட்டூ குத்துவது பேஷன் ஆகி விட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் டாட்டூ குத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இவரது.
ஆம்பர் லூக் பற்றிய தகவல்:
அதுஎன்னவென்றால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆம்பர் லூக். இவருடைய வயது 27. இவர் பச்சை குத்துதல் எனப்படும் டாட்டூ குத்துவது மீது அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வம் காரணமாக ஆம்பர் தனது உடல் முழுவதும் டாட்டூ குத்தி இருக்கிறார். மொத்தம் இவர் உடல் முழுவதும் 600 டாட்டூக்கள் போட்டிருக்கிறார். அதற்காக அவர் செல்வழித்துள்ள பணம் மட்டும் 250000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1,98,11,400 கோடி.
டாட்டூ மீது ஆர்வம் கொண்ட ஆம்பர்:
இதனால் இவரை பலரும் டிராகன் கோல் என அழைக்கிறார்கள். இவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதினாறு வயதில் முதல் முறையாக தன்னுடைய உடலில் டாட்டூ போட ஆரம்பித்தார். அதன் பின்னர் டாட்டூ மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ஆம்பர் உடல் முழுவதும் டாட்டூ போட்டு இருக்கிறார். இதனிடையே ஆர்வமிகுதியில் இவர் தன்னுடைய இரண்டு கண்களிலும் டாட்டூ போட நினைத்தார்.
பார்வையை இழந்த ஆம்பர்:
இதனால் கண்களை நீல நிறத்தில் மாற்ற வேண்டும் என எண்ணி ஆம்பர் கண்களில் மை ஊத்தி இருக்கிறார். இதில் அவர் கண்கள் நீல நிறத்தில் மாறி இருக்கிறது. பின் தன்னுடைய கண்களை நீல நிறத்தில் மாற்றுவதற்கான முயற்சியில் ஆம்பர் கண் பார்வை இழந்து இருக்கிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியிருந்தது, மையை ஊற்றியதால் மூன்று வாரங்களுக்கு மேல் பார்வையை இழந்து இருந்தேன். பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு பின் கண் பார்வை பெற்றேன்.
மீண்டும் பார்வை பெற்ற ஆம்பர்:
உடல் முழுவதும் டாட்டூ போடுவது, கண் பார்வை இழந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். இப்படி ஆர்வக்கோளாறில் உடல் முழுவதும் டாட்டூ போட்டது மட்டும் இல்லாமல் கண் பார்வையும் கிட்டத்தட்ட இழந்து மீண்ட அவரின் செயல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆம்பரின் இந்த செயலை பலரும் வினோதமாக பார்த்து வருகிறார்கள்.