‘பசிக்கு ஊசி’ விஜய் சேதுபதி டீவீட்டுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குனர் மோகன்.

0
1736
vjsmohan
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50000-த்தை நெருங்க உள்ளது. இதுவரை இந்த நோயினால் 1,694 பேர் பலியாகியும் உள்ளார்கள்.

-விளம்பரம்-

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தை பொறுத்தவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000 தை கிடந்த நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று 2000 த்தை கிடந்தது. இதுவரை தமிழக்தில் இந்த கொடிய நோயினால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 1485 பேர் குடமடைந்த நிலையில் 2537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

கொரோனா வைரசை கட்டுபடுத்த முடியாததால் பல்வேறு தொழிலும் முடங்கியுள்ளது. அதில் சினிமா துறையும் அடக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் சினிமா துறையை நம்பி இருந்த தினத் தொழிலாளிகளும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் நடிகர் நடிகைகள் நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி தன் பங்கிற்கு 10 லட்சத்தை அளித்திருந்தார்.

விஜய் சேதுபதி நடிகரையும் தாண்டி பல்வேறு சமூக கருத்துக்களை பேசி வருகிறார். மேலும், ட்விட்டர் பக்கத்திலும் அடிக்கடி எதாவது சமூகத்திற்கு உதுவும் கருத்துக்களை கூறி வருகிறார். அந்த வகையில்கொரோனா அச்சுறுத்தலில், பசியால் வாடும் மக்கள் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!!”என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதியின் இந்த கருத்தினை பலரும் வரவேற்றும் விமர்சித்தும் இருந்த நிலையில் திரௌபதி பட இயக்குனர் மோகன் விஜய் சேதுபதியின் இந்த கருத்தை விமர்சித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா’ என்று கூறியுள்ளார்.

Advertisement