திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.
திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன்.இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன், ராதாரவி மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் பாருங்க : நேரடியாக இறுதி போட்டிக்கு சென்ற நபர், இந்த ரெண்டு பேர் செமி பைனளுக்கு தேர்வு – யார் எலிமினேஷன் தெரியுமா ?
இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் மத மாற்றம், ஜாதி வெறிக்கு எதிரான வசனங்கள் என்று இடம்பெற்று இருந்தது. இந்த ட்ரைலர் குறித்து பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இந்த படம் குறித்து மோகன் பல்வேரு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல போலி சாமியாரான நித்யா நந்தா திரௌபதி கடவுள் குறித்தும் ருத்ர தாண்டவம் குறித்தும் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் நித்யா நந்தா கூறிய திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்றவை மகனின் பட தலைப்புகளாக இருப்பது மோகன் படங்களுக்கு ஒரு ப்ரோமோஷனாக தான் அமைந்துள்ளது.