திரௌபதி படத்தினை குப்பைனு சொன்ன மூடர் கூடம் நவீன். இயக்குனர் கொடுத்த பதிலை பாருங்க.

0
53090
naveen-mohan
- Advertisement -

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் “திரௌபதி”. தமிழ் திரை உலகில் கூட்டு தயாரிப்பு முறையில் உருவாகிய முதல் திரைப்படம் திரௌபதி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் மச்சான், ஷாலினியின் சகோதரன் ரிச்சர்ட் ரிஷி நடித்து உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக டூலட் படத்தில் நடித்த சுசீலா நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பழைய வண்ணாரப்பேட்டை படத்திற்கு இசையமைத்த ஜூபின் தான் இசையமைக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகியுள்ளது எனவும் கூறுகிறார்கள். இந்த படம் சமூகத்தில் காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டும் வகையில் உருவாகியுள்ள படம் ஆகும். ஏனென்றால் காதல் என்ற பெயரில் பணக்கார பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் பணத்தைக் கொடுத்து விட்டு உங்கள் பெண்ணை கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என்று மிரட்டும் கும்பலை பற்றி நாம் அதிகமாக அறிந்திருக்க மாட்டோம். தற்போது இந்த மாதிரி சம்பவம் தான் நிலவி வருகிறது. பெண்ணை அழைத்து வந்தது போல அப்படியே கொடுத்தால் ஒரு தொகை, கர்ப்பமாகி கொடுத்தால் ஒரு தொகை என இவர்கள் நாளுக்கு நாள் அட்டூழியம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மீறி போலீசார், கோர்ட் என நியாயம் கேட்டு செல்லலாம் என்று பார்த்தால் பெண் விருப்பப்பட்டு தான் சென்றால் என்று கேஸை முடிவிடுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த பெண் என்னை யாரும் கடத்த வில்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த பெண்ணை மிரட்டி வைக்கிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் பணம் கொடுக்க மறுத்தாலோ அல்லது போலீஸ் ,கோர்ட்டு என்று சென்றாலும் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அந்த பெண்ணின் பெற்றோர்கள் மீது ஆவணக்கொலை என்று திருப்பி விடும் சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் உதாசீனமாக பார்க்கிற கும்பலும் இருக்கிறது. இது எல்லாம் அப்பட்டமான உண்மை. பெண்ணின் பெயர் கெட்டுப் போய்விடும், குடும்ப மானம் போய்விடுமே என்ற விஷயங்களால் வெளியே வராமல் பெற்றோர்கள் இதை பார்த்துக் கொள்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இது பதற வைக்கும் உண்மை சம்பவம் ஆகும். இந்நிலையில் சமீபத்தில் வெளியான “திரௌபதி” படத்தின் டிரைலரும் இந்த மாதிரி நிகழும் நிகழ்வுகளை வெளிப்படுத்தி உள்ளது. அதோடு இந்த படத்தின் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை கோரி உள்ளது ஒரு அரசியல் கட்சி. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

-விளம்பரம்-

ஆகவே இந்த படம் குறித்து மூடர் கூடம், கொளஞ்சி போன்ற படங்களை இயக்கிய நவீன் முகமது அலி அவர்களிடம் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது, “குப்பை” என்று விமர்சித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இயக்குனர் நவீனை சமூக வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனர்.

Advertisement