அவர்கள் உள்ளத்தில் விஷயத்தை விளைவிக்காதீர்கள்- கௌதம் மேனனுக்கு அட்வைஸ் செய்த திரௌபதி இயக்குனர்.

0
2518
gautham
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கெளதம் மேனனும் ஒருவர். இவர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்பு, த்ரிஷா இருவரின் சினிமா வாழ்க்கையிலுமே மிக முக்கியமான படமாக இது அமைந்தது.

-விளம்பரம்-

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 2ஆம் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம்கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் இந்த குறும்படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் பாருங்க : ஒரு அண்ணன் காதல் தோல்வியில், ஒரு அண்ணன் விபத்தில்- ரோட்டில் வேலை செய்து வாங்கிய சம்பளம் – ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா.

- Advertisement -

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இதற்கும் இசை அமைத்துஇருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், இந்த குறும்படத்தில் திரிஷா, சிம்புவை மூன்றாவது குழந்தை என்று குறிப்பிட்டது தான் மீம் கிரியேட்டரகளின் ட்ரோல்களுக்கு பலியாகி இருக்கிறது. இந்த குறும்படத்தை கலாய்த்து பல்வேறு மீம்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் இந்த குறும்படம் குறித்து திரௌபதி இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கௌதம் மேனனுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில், கௌதம் மேனன் அவர்களே, பல இளைஞர்கள் உங்கள் திரைப்படம், மேக்கிங் ஸ்டைல், வசனங்கள், திரைப்பட தயாரிக்கும் முறை, பாடல்களில் உள்ள புதுமை ஆகியவற்றை ரசித்து வருகின்றனர். அவ்வாறு உங்கள் படங்களை ரசிக்கும் இளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்க முயற்சிக்காதீர்கள். எங்களுடைய மனச்சோர்வை நீக்குவதற்கு நீங்கள் கண்டிப்பாக தேவை. ஒரு ரசிகனாக இது எனது கோரிக்கை என பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இயக்குனர் மோகனின் இந்த பதிவை பார்த்த பலரும், மோகன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும், அவர் செய்தது தப்பாவே இருந்தாலும் அதை நீ சொல்லாத என்றும், நெத்தியடி ப்ரோ! நம்ம நோலன் @TENETFilm னு இதே மாதிரி ஒரு பாய்சன் படம் எடுத்துருக்காப்டி..அவருக்கும் எதாவது அறிவுரை சொல்லி திருத்துங்க ப்ரோ என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். அதை மோகன் பதிவிட்ட ட்வீட்டின் கமென்டில் பார்க்கலாம்.

Advertisement