அந்த மனுஷனும் 1985 நீயும் 85. இரங்கல் கூறிய திரௌபதி இயக்குனரை கேலி செய்த நபர்.

0
6721
mohan
- Advertisement -

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடிகரும் மருத்துவருமான சேதுராமன், திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.

-விளம்பரம்-

நடிகரும் மருத்துவருமான சேது ராமன். கடந்த வியாழக்கிழமை (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.

- Advertisement -

மேலும், சேதுராமனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரும நிபுணரான சேதுராமன் வெறும் மருத்துவராக மட்டும் இல்லாமல் அடிக்கடி மக்களுக்கு தேவையான சில மருத்துவ அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இவரது சமூக வலைதளப் பக்கத்தில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குறிப்புகளையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

சேதுராமனின் இறப்பிற்கு பல்வேறு திரை துறை நண்பர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், சேதுராமனின் நண்பரான சந்தானம், சேதுவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சேதுராமனின் உடலை சென்றார். மேலும், சேதுராமனின் இறப்பு குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், திரௌபதி பட இயக்குனரு இரங்கல் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

அதில், இயற்கை பல பாடங்களை கற்பித்துக் கொண்டு இருக்கிறது நமக்கு.. இன்னும் நம்பமுடியவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், அந்த மனுசனும் 1985 நீயும் 1985 வருசம் சீக்கிரம் நல்ல செய்தி எதிர் பாக்கலாம் என்று கமன்ட் செய்து மோகனை வம்பிழுத்தார். அதற்கு பதில் அளித்த மோகன், உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.அடுத்த சம்பவம் தரமா வருவதற்கு உன்ன மாதிரி ஆளுங்களோட ட்வீட் தான் காரணமா இருக்க போகுது. இன்னும் கதறுங்க என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement