திரௌபதி படத்தின் இந்தி ரீ – மேக் குறித்து மோகன் போட்ட ட்வீட் – ரசிகர்களின் கமெண்ட்ஸை மட்டும் பாருங்க.

0
4995
mohan
- Advertisement -

திரௌபதி படத்தை இந்தியிலும் எடுக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் மோகன் பதிவிட்டு உள்ளது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் பாருங்க : கீர்த்தி சுரேஷுக்கு நன்றி – சாவித்ரி கெட்டப்பை ரீ – கிரியேட் செய்த விஜய் டிவி சீரியல் ஹீரோயின். இவங்களுக்கும் நல்லா தான் இருக்கு.

- Advertisement -

பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் திரௌபதி படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று மோகன் ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் பெண் ஒருவர் மதம் மாறி திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்து கொண்டது குறித்து ஒருவர் ட்வீட் போட்டதற்கு மோகன் இப்படி ட்வீட் போட்டுள்ளார்.

மோகனின் இந்த டீவீட்டை பலரும் கேலி செய்து வருகின்றனர். திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. ரிச்சர்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா கதாநாயகியாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement