கீர்த்தி சுரேஷுக்கு நன்றி – சாவித்ரி கெட்டப்பை ரீ – கிரியேட் செய்த விஜய் டிவி சீரியல் ஹீரோயின். இவங்களுக்கும் நல்லா தான் இருக்கு.

0
6523
keerthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப் படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அதே போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் பிரபல பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘மகாநதி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றதோடு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாகி தமிலிலும் வெற்றி பெற்றது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் சினிமாவில் பிரேக் – மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஸ்வாதி.

- Advertisement -

இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை சாவித்ரியின் கெட்டப்பை ரீ – கிரியேட் செய்துள்ளார் பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ். ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ரேஷ்மா, பின்னர் தமிழில் ஒரு சில சீரியல்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் கூட அன்புடன் குஷி சீரியலில் நடித்து வந்தார்.

ஆனால், இந்த சீரியலில் இருந்து இவர் திடீரென்று விலக தற்போது இவருக்கு பதிலாக திருமணம் சீரியல் நடிகை ஸ்ரேயா நடித்து வருகிறார். இந்நிலையில், பழம்பெரும் நடிகையான சாவித்திரி கெட்டப்பில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரேஷ்மா. மேலும், “சாவித்திரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். சாவித்திரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement