தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பழைய வண்ணார்பேட்டை திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த ஜெய் பீம் படம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வருவது என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
இந்நிலையில் ஜெய்பீம் படத்தையும், மோகன் இயக்கிய ருத்ரதாண்டவம், திரௌபதி படத்தையும் குறித்து பலரும் பலவிதமாக விமர்சனங்களை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், ஜெய் பீம் படத்தில் வன்னியரை இழிவு படுத்தியது போல் ருத்ர தாண்டவம் படத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திய காட்சிகள் வந்திருக்கிறது என்று புதிய ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மோகன் அவர்கள் பேட்டி அளித்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் பாருங்க : அரை டிராயரில் ஜிம்மில் வெறித்தனமான வொர்க் அவுட் – ராஜா ராணி 2 வேலைக்கார மயிலா இது ?
அதில் அவர் கூறியிருப்பது, சமீபத்தில் இருந்தே ஜெய் பீம் படம் குறித்து விவாதம் போய்க் கொண்டிருக்கின்றது. அதைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. ஜெய்பீம் படத்தின் விவாதங்கள் பேசும் போது எல்லோரும் திரௌபதி, ருத்ரதாண்டவம் படத்தையும் பேசுகிறார்கள். அதிலும் படத்தில் இல்லாத விஷயத்தை பற்றிப் பேசுகிறார்கள். அதை பேசும் அறிவாளிகளுக்கு தான் இந்த விளக்கம். படம் பார்க்காமலேயே பார்த்த மாதிரி ஒரு சர்ச்சையை கிளப்புவது ரொம்ப தவறான செயல். நான் ஒரு சமுகத்தை மட்டும் வைத்து திரௌபதி படம் பண்ணவில்லை. இது குறித்து திரௌபதி படம் வந்தபோது பல பேட்டிகளில் சொல்லிருந்தேன்.
திரௌபதி படத்தில் பெண்களை திருமணம் பண்ணி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை பற்றி தான் சொல்லி இருந்தேன். ஆனால், அதை சமூகப் பிரச்சினையாக கொண்டு சென்றிருக்கிறீர்கள். நீங்களா ஒரு தலைவர் பெயரை சொல்லி, அதற்கு பெரிய பிரச்சனை கொண்டு வந்திர்கள். அந்த படம் நேரத்தில் பேசியது அதற்கு நான் விளக்கம் தந்தேன். ஆனால், அதையே திருப்பி மீண்டும் ஜெய் பீம் படம் போதும் பேசுகிறீர்கள். இது ஒருபக்கம் இருக்க ருத்ர தாண்டவம் படத்தில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? மதமாற்றத்தில் என்னென்ன சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கிறது, மதம் மாற்றினால் ஜாதியை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை தான் படத்தில் சொல்லி இருந்தோம்.
படத்தில் போதைப் பொருள் கடத்தும் 2 பசங்க ஷர்டிலும் அம்பேத்கர் புகைபடம் இருந்தது என்று ஒரு புது சர்ச்சயை கிளப்பி உள்ளிர்கள். ஆனால்,படத்தில் அம்பேத்கார் அய்யாவை இழிவு படுத்தும் காட்சியே இல்லை. அம்பேத்கர் ஒரு பொதுவான தலைவர். இல்லாத ஒன்றை ஏன் இருக்கு என்று சொல்கிறீர்கள். எதற்கு இந்த கேவலமான வேலை. படம் பார்த்துட்டு பேசினால் பரவால்லை. படம் பார்க்காமலேயே உங்களுக்கு தோன்றியதை, யாரோ எதையோ சொன்னதை வைத்து விவாதம் செய்வது எல்லாம் சரி இல்லை. இன்னொருமுறை படத்தில் இல்லாத விஷயத்தையோ, படத்தில் காட்டாத விஷயத்தை குறித்து தப்பாக பேசினால் நான் சட்டரீதியாக முடிவு எடுப்பேன் என்று கூறியிருந்தார்.