“ஒரு கிறிஸ்தவ பாதிரியார்தா இந்த படத்த எடுக்க சொன்னார்” படம் உருவான விதம் குறித்து மோகன் ஜி சொன்ன விளக்கம்.

0
1187
rudra
- Advertisement -

இயக்குனர் மோகன் ஜி அவர்கள் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் சொன்னதை தான் படமாக எடுத்துள்ளேன் என்று பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலரும் நடித்து உள்ளார்கள். இரண்டாவது முறையாக மோகன் ஜி, ரிஷி இந்த படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஜிபின் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இயக்குநர் மோகன் அவர்கள் இந்த படம் உருவான விதம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, இந்த படத்துக்கு பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் பண்ண கூட கேட்டார்கள்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் மளவிகாவிற்கு திருமணம் – வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

ஆனால், எனக்கு பெரிய நடிகர்களை வைத்து படத்தை இயக்குவதோடு என்னை சுற்றியுள்ள விஷயங்களை படமாக்குவதில் தான் எனக்கு ஆசை, விருப்பம். மேலும், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாக உள்ளார். அவர் திரௌபதி படம் பார்த்துவிட்டு இந்த பட கதையை எனக்கு கூறினார். இது மாதிரி ஒரு படம் எடுக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் கேட்டார். அதற்கு பிறகு தான் கிறிஸ்துவ மதத்தை எப்படி கார்ப்பரேட் மாதிரி மாற்றி வைத்துள்ளார்கள் என்று எனக்கு தெரிய வந்தது. மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் திரைப்படம் அதைப்பற்றியே தான் பேசியிருந்தது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நான் படமாக எடுத்தால் பெரிய அளவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கிடைக்கும் என்று நினைத்தேன். தற்போது இருக்கும் காலகட்டத்தில் இந்து மதத்தை அழித்து விடுவேன் என்று ஒரு மேடை போட்டு பேசி கைத்தட்டு வாங்கி விடுகிறார்கள். அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது என்பது பொது மக்களுக்கு தெரியாது. அதே தான் என்னுடைய நண்பர் பாதிரியார் அவரோட பார்வையிலிருந்து கூறியது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்றைக்கும் ஒரு புதிய கும்பல் இந்துவாகவும் இல்லாமல் கிறிஸ்துவர் ஆகவும் இல்லாமல் எங்களை கேள்வி கேட்கிறார்கள். இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. இதை தான் நான் என்னுடைய அடுத்த படமாக எடுக்க முடிவு எடுத்து ருத்ர தாண்டவம் என்று பெயரிட்டு என்னுடைய வேலையை தொடங்கினேன். இப்படி தான் என்னுடைய ருத்ர தாண்டவம் படம் தொடங்கியது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement