தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக என்றென்றும் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அதுமட்டுமில்லாமல் இவருடைய படத்தை பார்ப்பதற்கென்றே திரையரங்களில் ரசிகர்களின் கூட்டம் கடல் அலை போன்று கூடும். அந்தளவிற்கு இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.
வலிமை படம் ரீலிஸ் தேதி:
அதுமட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. மேலும், வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
கொரோனா தாக்கம் அதிகரிப்பால் வலிமை படத்துக்கு வந்த சோதனை:
இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், தீபாவளிக்கே வலிமை படம் ரிலீஸ் ஆகும் நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போனது. அதுமட்டுமில்லாமல் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட அலை போது படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பின் பல பிரச்சனைகளுக்கு பிறகு பொங்கல் அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள்.
மீண்டும் தள்ளி போக இருக்கும் வலிமை படம்:
ஆனால், தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இரவு நேரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு போட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தியேட்டர்களில் 50 சதவீதம்தான் அனுமதி என்று கூறிய நிலையில் பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் தள்ளிப் போகிறது. அந்த வகையில் வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகுமா? இல்லையா? பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸ் ஆகுமா? என்றும் தெரியவில்லை.
இயக்குனர் மோகன் போட்ட டீவீட்:
இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் மோகன் அவர்கள் ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது, ஒருவேளை வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் மாத்தி வைக்கப்பட்டிருந்தால் யாரும் ஒடிடி தளத்திற்கு சென்று படம் பார்க்க போகாதீர்கள். இது அஜித் சாரின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி மோகன்ஜி பதிவிட்ட டீவ்ட் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்து பலரும் விமர்சித்தும், கிண்டல் அடித்தும் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குனர் மோகன் படங்கள்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மோகன். இவர் வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது.