சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் ஜாதிகளை மையமாக வைத்து பல இயக்குனர்கள் படம் எடுத்து வைக்கிறார்கள். இது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுப்பினாலும் அதில் சில படங்கள் வெற்றியையும் பெற்று வருகின்றன. வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், ரஞ்சித் போன்ற பல இயக்குனர்கள் ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி இருந்தார்கள், இந்த படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர்களுக்கு சினிமா உலகில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.
திரௌபதி இயக்குனர் மோகன் :
அந்த வகையில் தற்போது மோகனும் ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளத்தை கொண்டவர் என்ற அடையாளத்தோடு இருப்பவர் தான். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.
இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் நாடக காதல் குறித்து எடுத்துக்கூறியிருந்தார் மோகன். ஆனால், இந்த படத்தில் நாடக காதலை செய்வது குறிப்பிட்ட இனத்தவர் தான் என்று மோகன் குறிப்பிட்டு இருப்பதாக சர்ச்சைகள் வெடித்து.
மோகனின் சமூக அக்கறை :
இந்த படத்தை தொடர்ந்து மோகன் ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு பின்னால் நடக்கும் அரசியல் குறித்து எடுத்து இருந்தார் மோகன். இப்படி தான் இயக்கிய கடைசி இரண்டு படங்களில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்ன மோகன் நிஜத்திலும் பல சமூக கருத்துக்களை கூறி வருகிறார்.
கானா பாடகரின் சர்ச்சை வரிகள் :
அதே போல அன்றாட வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய செய்திகளை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் கானா பாடகர் ஒருவர் மேடையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை பற்றி தவறாக பாடும் பாடல் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை ட்விட்டர் வாசி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
மோகன் காட்டம் :
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘8 வது படிக்கும் சிறுவயது சிறுமியை கர்பமாக்குவோம், ஏன்னா அப்போ தான் எங்கள விட்டு போவாது,பெண்கள் இந்த நாடக காதல் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் மோகன். அதில் ‘போக்ஸோ சட்டம் பாய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.