போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியிலே கைவிடப்பட்ட தனுஷ் படங்கள் – அடேங்கப்பா இத்தனையா ?

0
1116
Dhanush
- Advertisement -

போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியிலேயே கைவிடப்பட்ட தனுஷின் திரைப்படங்கள் குறித்த பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நிர்வாண போட்டோ ஷூட்டால் ரன்வீர் சிங்கிற்கு கிளம்பிய எதிர்ப்பு – அவரை பார்த்து போட்டோ ஷூட் செய்த விஷ்ணு விஷால் கொடுத்த விளக்கம்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பின் இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. தற்போது இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தி கிரே மேன் படம்:

தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறார். பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி உள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னாடி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் சமீபத்தில் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

பிறந்த நாள் வாழ்த்து:

மேலும், தனுஷ் நடித்த தி கிரே மேன் படம் தற்போது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு சிறிய கதாபாத்திரம் தான் கொடுக்கப்படுகிறது. அதிக எதிர்பார்ப்புடன் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்று சொல்லலாம். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தனுஷிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று அவருடைய வாத்தி படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் நடித்து போஸ்டர் எல்லாம் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாக இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை:

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதலில் வெளியாக இருக்க வேண்டிய திரைப்படம் தேசிய நெடுஞ்சாலை. ஆனால், இப்படம் கைவிடப்பட்டது. பின் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லதாவன் திரைப்படம் வெளியானது. பின் இந்த கதையே வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் NH4 திரைப்படம் வெளியானது.

திருடன் போலீஸ்:

பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் திருடன் போலீஸ். இந்த படத்தின் போட்டோ ஷூட் மற்றும் அறிவிப்புடன் இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது.

இது மாலை நேரத்து மயக்கம்:

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான படம் இது மாலை நேரத்து மயக்கம். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. பின் சில காரணங்களால் இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது. மேலும், இரண்டாம் உலகம் திரைப்படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் இருந்து மாற்றப்பட்டது தான் சொல்லப்படுகிறது.

சூதாடி:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், பார்த்திபன், நடிகை மீனாட்சி, லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவிருக்க வேண்டிய திரைப்படம் சூதாடி. இப்படம் 5 நாள் ஷூட்டிங் உடன் பாதியிலே கைவிடப்பட்டுள்ளது.

டாக்டர்ஸ்:

தனுஷ், சோனிய அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் டாக்டர்ஸ் திரைப்படம் உருவாக இருக்கிறது. போஸ்டருடன் இப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்பட சில காரணங்களால் திடீரென கைவிடப்பட்டுள்ளது.

Advertisement