கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.
விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.
விஜயகாந்த் இறப்பு:
அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி, அவருடைய தந்தை சிவக்குமார், சூர்யா, செந்தில்-ராஜலக்ஷ்மி என பல பிரபலங்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க பேசி இருந்தார்கள். ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் இன்னும் வரவில்லை.
கலைஞர் 100 விழாவில் வடிவேலு :
அவ்வளவு ஏன் அவர் இன்னமும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.அதிலும் ரசிகர்கள் பலர், வடிவேலு நன்றி கெட்டவர், மோசமான மனிதர் என்றெல்லாம் விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். சொல்லப்போனால், சோசியல் மீடியாவில் நடிகர் வடிவேலு குறித்து தான் விவாத பொருளாகவே மாற்றி விட்டார்கள். இப்படி ஒரு நிலையில் வடிவேலு சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவிற்கு சென்று இருந்தார்.
வடிவேலுவை அசிங்கப்படுத்திய சிவமணி :
இதனை கண்ட ரசிகர்கள் பலருக்கும் வடிவேலு மீது மேலும் வெறுப்பு தான் ஏற்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் வடிவேலுவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் ட்ரம்ஸ் சிவமணி. விழாவிற்கு ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், கார்த்தி என்று தமிழ் சினிமாவில் இருந்து ஏராளமான பிரபலங்கள் சென்று இருந்தனர். அவர்கள் அனைவரும் பேட்டரி கார் மூலம் அரங்கிற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
அந்த வகையில் இந்த விழாவிற்கு வடிவேலு வந்த போது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேட்டரி காரில் ட்ரம்ஸ் சிவமணி ஏறி அமர்ந்து கொண்டார். அப்போது அங்கிருந்த வடிவேலுவின் உதவியாளர் ஒருவர் இது வடிவேலு போக வேண்டிய கார் என்று சொல்ல ‘அவன வெய்ட் பண்ண சொல்றா’ என்று பேசியுள்ளார் சிவமணி. பின்னர் வடிவேலுவின் உதவியாளர் வாக்குவாதம் செய்தார். பின்னர் வேறு ஒரு காரிலும் வடிவேலுவை ஏற்றாமல் போக கடைசியில் பார்த்திபன் வடிவேலுவை அமர வைத்து அழைத்து சென்றார்.