ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன டூயட் பட நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களே என்று கமென்ட் போட்டு வருகிறார்கள். இவரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே பாலச்சந்தர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் டூயட். இந்த படத்தை ராஜம் பாலசந்தர் தயாரித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், பிரகாஷ்ராஜ், மீனாட்சி சேஷாத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் காதல் கதையை மையமாக கொண்டது. மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இந்த படத்தில் இடம் பெற்ற ஏ ஆர் ரகுமான் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. அதிலும் தற்போது இருக்கும் இளசுகள் மத்தியில் இந்த பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
மீனாட்சி சேஷாத்ரி திரை பயணம்:
மேலும், இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி ஷெசாத்ரி. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டான்பாட்டில் நவம்பர் மாதம் 16 நாள் 1963 அன்று பிறந்தார். தற்போது இவருக்கு 58 வயதாகிறது. ஹிந்தியில் 1983 இல் 54 பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகை 80 களில் அதிகம் சம்பளம் பெற்ற நடிகைகளில் மீனாட்சி ஷெசாத்ரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சி சேஷாத்ரி நடித்த படங்கள்:
பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பாலிவுட்டில் வலம் வந்தார். இவர் நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார். இவர் இந்திய கலையான பரதம், கதகளி போன்ற நடனங்களை கற்று மிகவும் தேர்ச்சி பெற்றார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பு திறமைக்கு பாலிவுடில் சிறந்த நடிகைக்கான விருதினை வாங்கி இருக்கிறார். பாலிவுடில் அமிதா பச்சன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.
மீனாட்சி சேஷாத்ரி குடும்பம்:
பின் இவர் 1995 இல் மைசூரை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஷ் என்பவரை திருமணம செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும், இரு மகன்களும் பிறந்தனர். தற்போது அமெரிக்கா நியூ யார்க் நகரில் தனது குடுபத்துடன் வசித்து வருகிறார் மீனாட்சி சேஷாத்ரி. பின் அவர் அங்கேயே பாரதநாட்டியம், கதகளி போன்ற நடன கலைகளை கற்றுத்தரும் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் இவர் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
டூயட் பட ஹீரோயின் புகைப்படம்:
இந்நிலையில் இவர் தற்போது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வயதான தோற்றத்தில் யோகா செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளார். என்ன இது நம்ம டூயட் பட ஹீரோயினா? இந்த படத்தில் நடித்த பிரபு தற்போது வரை தன்னுடைய அழகை மெயின்டன் செய்து வருகிறார். ஆனால், ஹீரோயினி எப்படி இருக்கிறார்? என்று அதிர்ச்சியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.