‘பிரபாகரன் தமிழின் அடையாளம்’ மலையாள பட காட்சியால் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ்டேக்- மன்னிப்பு கேட்ட படக்குழு.

0
1018
Dulquer
- Advertisement -

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த திரைப்படம் ‘செகண்ட் ஷோ’. இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இது தான் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த முதல் மலையாள திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘உஸ்தாத் ஹோட்டல், தீவ்ரம், ABCD, 5 சுந்தரிகள்’ என அடுத்தடுத்து சில மலையாள படங்களில் நடித்தார் துல்கர் சல்மான். அதன் பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த துல்கர் சல்மான், தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். 2014-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘வாயை மூடி பேசவும்’. இது தான் துல்கர் சல்மான் தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம்.

இதையும் பாருங்க : 21 நாட்களாக 75000 உணவு, சத்தமில்லாமல் உதவி செய்து வரும் கார்த்தி பட நடிகை.

- Advertisement -

‘வாயை மூடி பேசவும்’ படத்துக்கு பிறகு ‘ஓ காதல் கண்மணி, சோலோ, நடிகையர் திலகம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தார் துல்கர் சல்மான். கடைசியாக துல்கர் சல்மான் நடித்து மலையாளத்தில் வெளி வந்த திரைப்படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் அனூப் சத்யன் இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில், இந்த படம் பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘நெட்ஃபிளிக்ஸ்’- யில் வெளி வந்தது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நடிகர் சுரேஷ் கோபி, நாயை பிரபாகரன் என்று அழைப்பார். இக்காட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

-விளம்பரம்-

தற்போது, இது தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “தமிழ் மக்களிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பலர் இக்காட்சியில் பிரபாகரன் பற்றி வந்த வசனத்தை வைத்து தமிழ் மக்களை இழிவுபடுத்துவதாக கூறி வருகின்றனர். இது வேண்டுமென்ற செய்யப்பட்ட விஷயம் அல்ல. மலையாளத்தில் 1988-ஆம் ஆண்டு வெளி வந்த ‘பட்டணம் பிரவேசம்’ என்ற படத்தில் வந்த காமெடி காட்சியை மனதில் கொண்டு தான் இந்த வசனத்தை எங்கள் படத்தில் வைத்திருந்தோம்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த ‘பட்டணம் பிரவேசம்’ என்ற படத்தில் இடம்பெற்ற அக்காட்சியின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார் துல்கர் சல்மான்.

Advertisement