4வது பிறந்தநாளை கொண்டாடும் மகள் – துல்கர் சல்மான் பகிர்ந்த செம குயூட் புகைப்படம்.

0
1602
dulque
- Advertisement -

தமிழ் சினிமாவை போல மலையாள சினிமாவில் கூட வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.மேலும், முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார்.

- Advertisement -

அந்த படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல இவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு பின்னர் துல்கருக்கு தமிழிலும் நல்ல மார்கெட் ஏற்பட்டுள்ளது. துல்கர் சல்மான், கடந்த 2011 ஆம் ஆண்டு அமல் சுபியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமனத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அவரது பெயர் மரியா. இப்படி ஒரு நிலையில் துல்கரின் மகள் மரியா, இன்று (மே 6) தனது நான்காவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது மகளின் பிறந்தநாளில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

-விளம்பரம்-
Advertisement