விதி மீறிய துல்கர், வழி மறைத்த போலீஸ் – சற்றும் சீன் போடாமல் துல்கர் செய்ய செயல். குவியும் வாழ்த்து. வீடியோ இதோ.

0
20850
dul
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாள மொழியில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார். இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

-விளம்பரம்-
Top Most Impressive Vehicles On Dulquer Salmaan Car Collection 2020

மேலும், முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார். தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவு ஹிட்டுக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : விஐபி படத்தில் வந்த அமுல் பேபியா இது – இப்போ பாத்தா அப்படி சொல்ல மாடீங்க.

- Advertisement -

கார் பிரியரான துல்கர் சமீபத்தில் தனது சொகுசு காரில், ஆலப்புழா பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார் பைபாஸ் ரோட்டில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் வரும் எதிர்திசையில் தெரியாமல் தனது காரை ஓட்டிச்சென்று சிக்னலில் நிறுத்தியிருக்கிறார் துல்கர். உடனே, அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் துல்கர் சல்மானின் காரை பின்னால் எடுத்துச் சென்று வரிசையில் வருமாறு கூறியிருக்கிறார்.

தன்னுடைய தவறை உணர்ந்த துல்கர் சல்மான் அந்த போக்குவரத்து காவலரி டம் எந்த ஒரு வாக்குவாதம் செய்யாமல் கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் காரை பின் நோக்கி ஓட்டிச் சென்று பின்னர் மீண்டும் சரியான திசையில் சென்றுள்ளார். அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். போக்குவரத்து காவல்துறை சொன்னதை கேட்டு தான் ஒரு என்று கூறி சீன் போடாமல் துல்கர் சல்மான் நடந்து கொண்ட விதத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம் சாலை விதிகளை மீறியது தவறு என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement