விஐபி படத்தில் வந்த அமுல் பேபியா இது – இப்போ பாத்தா அப்படி சொல்ல மாடீங்க.

0
1747
amitesh
- Advertisement -

தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த படமே இவர் இயக்கிய முதல் படம் ஆகும்.அதோடு இவர் இயக்கிய முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,அமிதேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை தனுஷ் அவர்கள் தான் தயாரித்தது உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தனுஷின் 25 வது படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல பெயரை வாங்கியது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்து உள்ளார் அமிதேஷ். இவர் ஒரு தென்னிந்தியர் நடிகர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில்உள்ள படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : என்கிட்ட பணம் பறிக்க பாக்குறாங்க – தன் மீதான புகாருக்கு விமல் அதிரடி அறிக்கை.

- Advertisement -

இதோடு இவர் ஆங்கிலப் படங்களிலும் கூட நடித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் அனிருத்தின் நெருங்கிய நண்பர், அனிருத் மூலமாக தான் இவருக்கு வி ஐ பி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வி ஐ பி படத்திற்கு பின்னர் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப் போகாதே படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் பல ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார் அமிதேஷ். சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் அவரை தாடியுடன் பார்க்கையில் விஐபி படத்தில் வந்த அமுல் பேபியா இது என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement