நடிகை வீட்டில் கோடி கணக்கில் பணம், தங்க கட்டி, காப்பு, தங்கப்பேனா, நகைகள். ஆடிப்போன அமலாக்கத்துறை அதிகாரிகள்.

0
273
aprajith
- Advertisement -

நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பார்தா சட்டர்ஜியால் கட்சிக்கு பெரும் அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக ஆதாரத்தின் பேரில் கிடைத்த தகவலால், அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைச்சரான பரேஷ் சி மற்றும் தொழில் அமைச்சர் பர்த்தா சட்டர்ஜி, மானிக் பட்டாச்சாரியா மற்றும் அவர்களுக்கு நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

-விளம்பரம்-

பார்த்தா சாட்டர்ஜியின் பதவிகள் மற்றும் குற்றசாட்டு :-

மேற்குவங்காளத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை மறுசீரமைப்புத் துறை ஆகியவற்றை அவர் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்தா சாட்டர்ஜி வயது 69. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

- Advertisement -

நடிகையின் வீட்டில் கட்டு கட்டாக பணம் :-

இதை தொடர்ந்து பெல்ஹச்ஷியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதா பானர்ஜியின் வீட்டில் 21.90 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியையும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்து பார்த்தா சாட்டர்ஜியை மந்திரி பதவியில் இருந்தும் கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

நடிகைக்கு மேலும் ஒரு வீடு :-

விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறையினரிடம், பெல்கஞ்யா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு மேலும் ஒரு வீடு உள்ளதாக அர்பிதா முகர்ஜி தெரிவித்தார். இந்நிலையில், பெல்கஞ்யா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணமும், நகையும் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பல பெரிய பைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பைகளில் செங்கல் அமைப்பில் பல பார்சல்கள் இருந்தன.

-விளம்பரம்-

பார்சல் பார்சலாக பணம் மற்றும் தங்கம் :-

அந்த பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 லட்ச ரூபாய் பார்சலாகவும், 500 ரூபாய் நோட்டு 20 லட்ச ரூபாய் பார்சலாகவும் கட்டப்பட்டு பல பார்சல்கள் இருந்தன. அந்த வீட்டில் நடந்த சோதனையில் மொத்தம் 27 கோடியே 90 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர், அந்த வீட்டில் இருந்த ஒரு லாக்கர் அறையை திறந்தபோது அங்கு தலா ஒரு கிலோ எடைகொண்ட 3 தங்க கட்டிகள் 3 கிலோ, தலா அரை கிலோ எடைகொண்ட 6 தங்க காப்புகள், தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன பேனா ஆகியவை இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தங்க கட்டிகள், நகைகளின் மதிப்பு 4.31 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் அர்பிதா பானர்ஜி வீட்டில் இருந்து 21.90 கோடி மற்றும் 27.90 என சுமார் மொத்தம் 49.80 கோடி பணத்தையும், 6 கிலோவுக்கு அதிகாமான தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான நடிகை அர்பிதா பானர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜிக்கு, அவரது மந்திரிக்கு தொடர்புடைய இடங்களில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியிருப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்த்த சட்டர்ஜியின் செயல் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அவர் தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், பார்தா சட்டர்ஜியால் கட்சிக்கு பெரும் அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளதாக கடுமையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”அடுத்தடுத்து நடைபெற்றும் வரும் நிகழ்வுகள் கவலை அளிக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அவர் ஏன் பொது வெளியில் நான் அப்பாவி என சொல்லவில்லை? இப்படி சொல்ல அவருக்கு எது தடுக்கிறது?” எனப் பேசினார்.

Advertisement