இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் எலெக்ஷன். இந்த படத்தில் உறியடி புகழ் விஜயகுமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் ப்ரீத்தி அஷ்ராணி, ஜார்ஜ் மரியன், திலீபன், பாவல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ரீல் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஹீரோ விஜயகுமார். இவருடைய அப்பா ஜார்ஜ் மரியன். இவர் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தீவிர தொண்டனாக செயல்பட்டு வருகிறார். அதோடு ஊரிலேயே இவர் ஆதரவளிக்கும் வேட்பாளர் தான் தேர்தலிலேயே வெற்றி பெறுவார். அந்த அளவிற்கு ஊர் மக்கள் மத்தியில் இவருக்கு மரியாதை இருக்கிறது.
ஒரு கட்டத்தில் ஜார்ஜ் மரியனின் நபர் ஒருவர் சுயேச்சையாக நிற்கிறார். இதனால் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று அந்த நபர் கேட்கிறார். ஆனால், கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைக்கிறார் ஜார்ஜ். பின் 2011-ம் ஆண்டு தேர்தலில் ஹீரோ விஜயகுமார் நிற்கிறார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்கிறார். இந்த தேர்தலில் இவர் சுயேச்சையாக நிற்கிறார்.
இதற்குப் பிறகு அரசியலால் ஹீரோ உடைய வாழ்க்கை புரட்டிப் போடுகிறது. தேர்தலில் ஹீரோ வெற்றி பெற்றாரா? ஹீரோ எடுத்த முடிவு தான் என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் நடராஜன் கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவரை அடுத்து கட்சியினுடைய தீவிர தொண்டனாக ஜார்ஜ் மரியின் உடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
படத்தில் முதல் பாதி காதல் பாணியிலும், இரண்டாம் பாதியில் அரசியலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதையில் வரும் சில காட்சிகள் மெட்ராஸ் படத்தை நினைவுபடுத்தி இருக்கிறது. இருந்தாலும் அந்த காட்சிகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. மேலும், படத்தில் அரசியல்வாதியாக திலீபன் மிரட்டி இருக்கிறார்.
இறுதியில் படம் இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க கூடிய அளவிற்கு சில காட்சிகள் இருக்கிறது.
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். இயக்குனர் கதை களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பையும், சுவாரசியம் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் உடைய நடிப்பு நன்றாக இருக்கிறது
கதைக்களம் ஓகே
அரசியலை குறித்து இயக்குனர் சொல்லியிருக்கிறார்
படத்தில் சில காட்சிகள் சூப்பர்
குறை:
இயக்குனர் கதை களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
கிளைமாக்ஸில் யூகிக்க கூடிய அளவிற்கு காட்சிகள் இருக்கிறது
கிளைமாக்ஸ் சுமார்
மொத்தத்தில் எலெக்சன் – அரசியல் விழிப்புணர்வு