அடிப்படை விஷயம் கூட தெரியாமல் வேட்பு மனு தாக்கல் செய்த VMI வேட்பாளர். சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள். வச்சி செய்றாங்க.

0
365
vnj
- Advertisement -

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக தேர்தலுக்கு போட்டியிட நின்ற வேட்பாளர் ஒருவருக்கு சரியான வயது இல்லை என்று அதிகாரிகள் மனுவை நிராகரித்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 10 வருடங்களுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதோடு தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் ஆயுதமாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான பேர் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள். இதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் இருந்தார்கள்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்: ​

மேலும், தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் வெற்றியாளர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டியும் இருந்தார் விஜய். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:

வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டியிட இருக்கிறது. இதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர். இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் மனு நிராகரிப்பு:

இதற்கு அணைத்து கட்சி வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த தேர்தலில் பல சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மும்முரமாக அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தலில் நிற்பதற்காக மனு தாக்கல் செய்ய சென்ற விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் ஒருவரின் மனுவை அதிகாரிகள் நிராகரித்து உள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மனு தாக்கல் இடத்தில் நடந்தது:

அப்படி என்ன நடந்தது என்றால், மாநகராட்சி 13 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பரணி என்ற 19 வயது நிறைவடைந்த இளைஞர் ஒருவர் தேர்தலில் நிற்க மனு தாக்கல் செய்ய சென்றார். அங்கு இருந்த அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர் 21வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதுதான் அடிப்படை விதிமுறை என்று பரணியின் விண்ணப்பத்தை நிராகரித்து உள்ளனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை போட்டு விஜய் மக்கள் இயக்கத்தையும், விஜய்யும் பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement