உலகின் மிக உயரமான மலையில் தேசியக்கொடியுடன் ஏறிய விஜய், ரஜினி பட நடிகை.

0
1044
nivetha
- Advertisement -

இந்திய நாட்டின் தேசிய கொடியுடன் உலகில் மிக உயரமான மலையில் ஏறிய பிரபல நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நிவேதா தாமஸ். இவர் குழந்தை நட்சத்திரமாக தான் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து பல படங்களில் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் உலகின் மிக உயரமான மலையில் தேசியக் கொடியுடன் ஏறிய புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : ஷங்கரின் மருமகன் மீது போக்சோ ஏன்? – எஃப்.ஐ.ஆர் முழு விவரம். 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் இவர் தான்.

- Advertisement -

உலகின் மிக உயரமான மலைகளில் ஒன்று கிளிமாஞ்சாரோ மலை. டான்சானியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது கிளிமஞ்சரோ மலை. இந்த கிளிமஞ்சரோ மலை ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமின்றி உலகிலேயே மிக உயரமாக உள்ள தனி மலை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிமஞ்சாரோ மலை இமய மலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது உயரம் அதிகமில்லை. இருந்தாலும் இந்த மலை தான் உலகில் உள்ள தனி மலைகளில் மிக உயரமானது.

மேலும், கிளிமஞ்சாரோ மலையில் ஏற வேண்டும் என பல மலையேற்ற வீரர்கள் கனவு கண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை செய்துள்ளார். கிளிமஞ்சாரோ மலை உச்சிக்கு சென்று நம்முடைய இந்திய நாட்டின் தேசியக் கொடியை வைத்து இருக்கும் புகைப்படத்தை நிவேதா தாமஸ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் கமெண்டுகளை குவித்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement