நிறைய மிஸ் பண்றோம் – கதறி கதறி அழுத விஜய் டிவி பிரபலங்கள். வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
4905
vijay
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சியில் எவ்வளவோ சேனல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும் தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சேனல் விஜய் டிவி தான். தொலைக்காட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் சன் டிவி முதலில் இருந்தாலும் தற்போது சன் டிவியை முந்திக்கொண்டு விஜய் டிவி வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், சீரியல்களும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்து வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் விஜய் டிவியில் புதிய புதிய நிகழ்ச்சியையும் சீரியல்களையும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும், விஜய் டிவியில் எப்போதுமே புதிய புதிய நிகழ்ச்சிகள் வித்தியாசமான வகையில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், mr. & mrs. சின்னத்திரை என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : மாரடைப்பால் காலமான பிக் பாஸ் பிரபலத்திற்கு பதிலாக தனக்கு RIP போட்ட நபர் – கடுப்பான சித்தார்த்.

- Advertisement -

டிவி சீரியல்களுக்கு ஒருபக்கம் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ரியாலிட்டி ஷோக்களும் ட்ரெண்டாக இருந்து வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது உணர்வுபூர்வமான பல விஷயங்களையும் காண்பிக்கிறது.

இந்தநிலையில் தற்போது விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி தான் star kids. அதாவது இந்த நிகழ்ச்சி விஜய் டிவி பிரபலங்களின் பிள்ளைகளை வைத்து கலாட்டாவாக எடுக்கப்படும் நிகழ்ச்சி ஆகும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரோமோவில் பாடகி ராஜலட்சுமி, நிஷா, ஈரோடு மகேஷ் போன்ற பல பிரபலங்கள் கண்ணீருடன் பேசியுள்ளார்கள், இவர்கள் எல்லாம் வேலைக்கு செல்வதால் அவர்கள் பிள்ளைகளை அதிகம் மிஸ் செய்வதாக பற்றி பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதை பார்த்தால் பார்ப்பவர்களின் கண்களிலே கண்ணீர் வரும்படி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிற பிரபலங்களும் தங்களை அறியாமல் தேம்பி தேம்பி அழும் காட்சியும் காண்போரை உறைய வைத்துள்ளது. மேலும், இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்களும் மிக வருத்தத்துடன் ஆறுதல் வார்த்தைகளை கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ குறித்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வந்துகொண்டிருக்கிறது.

Advertisement