எப்படி இருக்கிறது விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ முழு விமர்சனம் இதோ.

0
894
- Advertisement -

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள படம் எனிமி. இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி, ஆக்சன் கதை களத்தை கொண்டுள்ளது. இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருநாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். விஷால்–ஆர்யா காம்பினேஷனில் வெளியாகியுள்ள இந்த படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

விஷால், ஆர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து இப்படத்தில் நடித்து உள்ளார்கள். படத்தில் தம்பிராமையாவின் மகன் விஷால், பிரகாஷ்ராஜின் மகன் ஆர்யா. சிறுவயதிலிருந்து விஷால், ஆர்யா நல்ல நண்பர்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரின் வீடுகளும் பக்கத்தில் இருப்பதால் இவர்களுடைய நட்பும் மிக நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இவர்கள் இருவருக்குமே பயிற்சி கொடுக்கிறார்.

அதோடு போலீஸ் குறித்து பல விஷயங்களையும் சொல்லித் தருகிறார். பின் திடீரென பிரகாஷ்ராஜ் கொலை செய்ய படுகிறார். இதனால் நண்பர்களாக இருக்கும் விஷாலும் ஆர்யாவும் பிரிகிறார்கள். பின் இவர்கள் இருவரும் வளர்ந்து பெரிய ஆளாக காண்பிக்கிறார்கள். விஷால் சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அப்போது மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது.

-விளம்பரம்-

இதை விஷால் தடுக்கிறார். பிறகு மினிஸ்டரை கொலை செய்ய முயற்சி செய்தவர் தன்னுடைய நண்பர் ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஆர்யாவிற்கு தண்டனை கிடைத்ததா? ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபடக் காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ்ராஜ்ஜை யார் கொலை செய்தது? பிரகாஷ்ராஜ் கொலைக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே தங்களுடைய ஸ்டைலில் போட்டி போட்டுக்கொண்டு வேற லெவலில் நடித்திருக்கிறார்கள்.

மேலும், ஆக்ஷன் காட்சிகளில் இருவருமே தூள் கிளப்பி இருக்கிறார்கள். படத்தில் கதாநாயகியாக வரும் மிருணாளினி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்தா மோகன்தாஸ் படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மனதில் நிற்கிறார். தம்பி ராமையாவும், பிரகாஷ் ராஜும் தங்களுடைய அனுபவத்தின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் கிரைம், திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார் ஆனந்த் சங்கர்.

மேலும், ஆர்யா — விஷால் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் என்பதால் இவர்கள் இருவருக்குமே சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. யார் கொலை செய்தது? கொலைக்கான பின்னணி என்ன என்று பல ட்விஸ்ட்களையும், சுவாரஸ்யங்களையும் சொல்லி இருப்பது படத்திற்கு பக்க பலமாக உள்ளது. படத்தில் பாடல்களும் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்களுடைய காம்பினேஷனில் வந்த படம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது.

பிளஸ்:

அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஆக்ஷன், திரில்லர் என்று சுவாரசியம் நிறைந்துள்ளது.

இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

படத்தில் விஷால், ஆர்யா இவர்களுடைய நடிப்பை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்துள்ளது.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம்.

மைனஸ்:

சொல்லிக் கொள்ளும்படியாக படத்தில் குறைகள் பெரிதாக இல்லை.

இன்னும் காமெடி காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அவர்கள் இரண்டு பெரிய நட்சத்திரங்களை வைத்து எந்த ஒரு ஈகோவும் பிரச்சனையும் வராமல் திறமையாக கதை களத்தை கொண்டு சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆக்ஷன் திரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மொத்தத்தில் ‘எனிமி’ — ரசிகர்களுக்கு நல்லவனாக அமைந்தான்.

Advertisement